!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 22 மே, 2015

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள் மறு மதிப்பீடு கோரிய மனு டிஸ்மிஸ் :ஐகோர்ட் தீர்ப்பு

மதுரை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டையை சேர்ந்த முத்தழகன், கடந்தாண்டு ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகள் காவ்யா கடந்தாண்டு நடந்த எஸ்எஸ்எல்சி தேர்வில் 487 மதிப்பெண் பெற்றார். தமிழ் பாடத்தில் மட்டும் 87 மதிப்பெண் கிடைத்தது. விடைத்தாள் நகலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றேன். அதில் 7 கேள்விகளுக்கான மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கு சரியாக மதிப்பெண் வழங்கியிருந்தால் மாநில அளவில் சாதனை படைத்திருப்பார். இதன் காரணமாக மேல்படிப்பில் கல்வி உதவித்தொகைகள் பெறமுடியவில்லை. எனவே, என் மகள் தேர்வெழுதிய தமிழ் பாடத்திற்கான விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடவேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். ‘எஸ்எஸ்எல்சி தேர்வை பொறுத்தமட்டில் மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மறு மதிப்பீடு செய்ய கோரமுடியாது’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘‘விடைத்தாளை பார்க்கும்போது முறையாக திருத்தப்பட்டுள்ளது தெரியவருகிறது. விதிப்படி மறுமதிப்பீடு செய்யவும் கோரமுடியாது. எனவே இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதை அனுமதித்தால் மாணவர்கள் பலரும் நீதிமன்றத்தை நோக்கி வருவர். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’’ என நீதிபதி உத்தரவிட்டார்.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png