!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 7 அக்டோபர், 2015

பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்

        சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நேற்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.


           இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கீழ்கண்ட 15 அமசக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் பதில் விவரம்

**மொத்தமுள்ள 15 கோரிக்கைகளில் 9 நிதிச் சார்ந்த கோரிக்கைகள் எனவும், 4 பணி சார்ந்த கோரிக்கைகள் எனவும் மீதமுள்ள 2 பொதுவானகோரிக்கைகள் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. அதில் பணிச் சார்ந்த கோரிக்கைகள் மீது ஆராய்ந்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
**நிதிசார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று நிதித்துறைச் செயலாளரை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தித்து பேசியுள்ளார் எனவும், இவையனைத்தும் நிதிச்சார்ந்த கோரிக்கைகள் என்பதால் இதுகுறித்து நிதித்துறை தான் முடிவெடுக்க வேண்டுமெனவும்,

**மத்திய அரசிற்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்து அரசாணை எண்.200ன் படி 6வது ஊதியக் குழுவில் தற்பொழுது முடிவு காண இயலாது எனவும், ஆனால் 7வது ஊதியக் குழுவின் பொழுது தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

**பங்களிப்பு ஓய்வூதியம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவை சட்டம் சார்ந்தவை என்பதால் இவைகள் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியி இறந்த மற்றும் ஓய்வுப் பெற்றவர் மற்றும் கடன் பெறுதல் போன்றவைகளுக்கான புதிய வழிக்காட்டுதல்கள் அரசாணை வாயிலாக விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

**தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர்கள் நியமனம் செய்த நாள் முதல் பணிவரன்முறை செய்ய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது எனவும் இவற்றில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அத்ற்காக சுமார் ரூ.172 கோடி செலவினமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிதியுதவிப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் தொகுக்கப்படவில்லை, அவைகள் விரைவில் தொகுக்கப்பட்டு விரைவில் அரசுக்கு விவரங்கள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

**தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணியிடங்கள் முதலில் ஒதுக்க என்ற கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காண்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png