!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 6 அக்டோபர், 2015

33 சதவீத இந்திய இளைஞர்களுக்கு ரத்த அழுத்தம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் 33 சதவீத இளைஞர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், அவர்களுக்கு தெரியாமலேயே நோயில் சிக்கி உள்ளனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'கார்டியாலஜி சொசைட்டி ஆப் இந்தியா' என்ற அமைப்பு, நாடு முழுவதும் இளைஞர்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.


சிகரெட் புகைக்காத, மது அருந்தாத பல இளைஞர்களுக்கு ரத்த அழுத்த நோய் வந்துள்ளது தான் ஆச்சரியம். இதற்கு, அவர்களது வாழ்க்கை முறையே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. பல இளைஞர்கள், பாஸ்ட் புட்-யை அதிகம் உட்கொள்கின்றனர். இவர்களுக்கு நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. ஐ.டி., துறையில் இரவு பணிக்கு செல்லும் இளைஞர்களும் இதுபோல் பாதிக்கப்படுகின்றனர். பலர் சொந்தமாக சமையல் செய்வதற்கு சோம்பல்பட்டு, ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர். கிடைக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, இரவில் பணியை தொடர்கின்றனர். இவர்களைப் போன்றவர்கள் தான் அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த 'கார்டியாலஜி சொசைட்டி', ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டோரில் மூன்றில் 2 பங்கு பேருக்கு, அந்த நோய் வந்ததே தெரியவில்லை. பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தமும் பலருக்கு இந்நோய் தாக்கியதற்கு காரணம். இவர்கள் வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும். 'பாஸ்ட் புட்' உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ரத்த அழுத்தம் என்பது ஒரு 'சைலன்ட் கில்லர்'. ரத்த அழுத்த நோய் வந்தவர்களை இதய நோய் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளது'' என்று கூறியுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png