!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 21 நவம்பர், 2015

வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும்: 7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது


ரிந்துரைகள், அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் கையில், தாராளமான பணப்புழக்கம் இருக்கும்; இதனால், வீடு, கார், டூ - வீலர், வீட்டு உபயோகப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எகிறும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2016 ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, ஒரு கோடி பேரின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியம், 23 சதவீதம் அளவுக்கு உயரும். அப்போது, அவர்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த பணத்தை, அவர்கள் உபயோகமாக செலவழிக்க திட்டமிடுவர்.

றிப்பாக, 'குறைந்த விலையில் வீடுகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க முற்படுவர். இதனால், அவற்றின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். இது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.



பொருளாதார வளர்ச்சி 0.65 சதவீதம்:






அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட உள்ள, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.65 சதவீதம் கூடும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது; இது, ஆறாவது ஊதியக் குழுவின் போது, 0.77 சதவீதமாக இருந்தது.

* ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்தும் போது, 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இது, மத்திய பட்ஜெட்டில், 73 ஆயிரத்து, 650 கோடி ரூபாய், ரயில்வே பட்ஜெட்டில், 28 ஆயிரத்து, 450 கோடி ரூபாய் என, பகிர்ந்து கொள்ளப்படும்

* ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை, 23.55 சதவீதம் உயர்த்தி வழங்க, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அடிப்படை சம்பளம் மட்டும், 16 சதவீத அளவுக்கும், அனைத்து விதமான படிகளும், 63 சதவீதம் அளவுக்கும் உயரும். சம்பளத்திற்கான அரசின் செலவு, 39 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, இரண்டு லட்சத்து, 83 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும். 
படிகளுக்கான செலவு, 12 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும். ஓய்வூதியத்திற்கான செலவு, 33 ஆயிரத்து, 700 கோடி அதிகரித்து, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாக இருக்கும் 
* முன்னாள் ராணுவத்தினருக்கு, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளதால், சம்பள கமிஷன் பரிந்துரை அமல் கூடுதல் சுமையாகும்.


23.55 %:மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பென்ஷன் உயர்வு
16 %:அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் உயர்வு
63 %:படிகளில் உயர்வு
24 %:பென்ஷனில் உயர்வு



52ரத்து:* ரயில்வே ஊழியர் மற்றும் கேபினட்செயலர்களுக்கான கேளிக்கை படி
* குடும்ப கட்டுப்பாடு, முடி வெட்ட, பரிசோதனை, இறுதிச்சடங்கு, சேமிப்புக் கணக்கு, கூடுதல் வேலை படிகள்
* நர்சிங் ஊழியர்களுக்கான உணவக படி



36:பிற படிகளுடன் இணைப்பு
* வாஷிங் அலவன்ஸ் எனப்படும் துணி துவைப்பு படி இணைப்பு
* குறிப்பிட்ட இடங்களுக்கான படிகள், இடர்பாடு மற்றும் கடினப்பணி படியில் இணைப்பு



108:தொடரும், கூடுதலாகியுள்ள படிகள்
* மாற்றுப்பணி, தேசிய விடுமுறை மற்றும் மொழி படிகள், 50 சதவீதமாக அதிகரிப்பு
* இணையதளம், மொபைல், செய்தித்தாள் படிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன
* வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வழங்கப்படும் தினப்படி தொடர்கிறது





Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png