!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 19 நவம்பர், 2015

சென்னையில் பாலிதீன் பைக்கு தடை? அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை

சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட பல நீர்வழித்தடங்கள் உள்ளன. சென்னையில் தினமும் சேகரமாகும், 5.50 கோடி லிட்டர் கழிவு நீரும் நீர்வழித் தடங்களில் சேருகிறது. 


பட்டினப்பாக்கம், நேப்பியர் பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள முகத்
துவாரங்கள் வழியாக, வங்க கடலில் சென்று கலக்கிறது. நீர்வழித்தடங்களில் அடைப்புகள் ஏற்பட, சென்னைவாசிகள் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகளே காரணம். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூவம் நதி சீரமைப்பு பணியை மாநில அரசும், பக்கிங்ஹாம் கால்வாயில் நீர்வழித்தடம் அமைக்கும் பணியை மத்திய அரசும் மேற்கொள்ள உள்ளன. தற்போதைய நிலையில், அனைத்து நீர்வழித் தடங்களும், கழிவுகள், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் இன்றி சுத்தமாகியுள்ளன. எனவே இதை பயன்படுத்தி, பாலிதீன் பைகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். 
அவ்வாறு செய்தால், மழை காலங்களில் வெள்ளதடுப்பு முன்னேற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதுகுறித்து, அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png