!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 20 நவம்பர், 2015

பள்ளி பஸ்சில் நல்ல பாம்பு

காட்பாடியில், பள்ளி பஸ்சில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதைப் பார்த்து, திகிலடைந்த மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆபத்தில் உதவாமல் ஓட்டம் பிடித்த டிரைவரை பொதுமக்கள் தாக்கினர்.
மழையின் தீவிரம் குறைந்ததையடுத்து, விடுமுறைக்கு பின், வேலுார் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் செயல்படத் துவங்கின. காட்பாடியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி பஸ், நேற்று காலை, 7:00 மணிக்கு, வேலுார், சத்துவாச்சாரியில் இருந்து மாணவ, மாணவியருடன், காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தது.


பஸ்சில், 40 மாணவ, மாணவியர் இருந்தனர். காலை, 7:30 மணிக்கு, சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் வந்து நின்றது. அங்கு காத்திருந்த மாணவ, மாணவியர் பஸ்சில் ஏறினர். அப்போது டிரைவர் சீட் அருகே, நல்ல பாம்பு ஒன்று, திடீரென கிளம்பி படமெடுத்து, ஆடியது.பாம்பை பார்த்ததும், நடு நடுங்கிய டிரைவர், பஸ்சை நிறுத்தி விட்டு இறங்கி ஓடினார். பஸ்சிற்குள் இருந்த மாணவ, மாணவியர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். சில மாணவர்கள் பயத்தில், பஸ் ஜன்னல் வழியாக வெளியே குதித்து ஓடினர். 
மாணவர்களின் அலறலை கேட்டு, அங்கிருந்தவர்கள், பஸ்சிற்குள் ஏறி, மாணவ, மாணவியரை பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டனர். பின், பாம்பை, அடித்துக் கொன்று, அப்புறப்படுத்தினர். பயந்து ஓடிய டிரைவரை, சிலர் தாக்கினர். பயத்தில் இருந்து மீளாத மாணவ, மாணவியர், மீண்டும் பஸ்சில் ஏற மறுத்தனர். போலீசார் அவர்களின் பயத்தை போக்கி, பஸ்சில் ஏற்றி, பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். 

'பத்து நாள் விடுமுறைக்கு பின், பஸ்சை எடுத்த போது, டிரைவர் சோதனை செய்யவில்லை; மாணவர்களை காப்பாற்றாமல் ஓடிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png