!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 6 ஜனவரி, 2016

மாநில அளவில் நடக்கும் அடைவுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக19 சிறப்பு அதிகாரிகள் நியமனம்


மாநில அளவில் நடைபெறுகிற அடைவுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் தொடக்க நிலை மாணவர்களின் கற்றல் திறனை அறிய, கற்றல் அடைவு தேர்வு நடத்த கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் வட்டார வாரியாக தேர்வு செய்து தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுக்கு பிரத்யேக  கேள்வித்தாள்கள் பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்படும்.

 இத்தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக மதிப்பீடு செய்யப்பட்டு, மாநில அளவில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவின் படி வரும் கல்வியாண்டுகளில் பயிற்சிகள், கற்றல், கற்பித்தல் முறை மாற்றியமைக்கப்படும். இதில் மாணவர்களின் எழுத்து திறன், வாசிப்புதிறன், கணித செயல்பாடு பரிசோதிக்கப்படுகிறது. இக்கல்வியாண்டிற்கான தேர்வு இன்று தொடங்கி வரும் 8ம் ேததி வரை நடக்க உள்ளது. ஆனால் தொடக்கக் கல்வித்துறையில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எழுத படிக்க தெரிவதில்லை. ஆல்பாஸ் என்பதாலும், பொதுத்தேர்வுகள் இல்லையென்பதாலும், ஆசிரியர்களும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு வந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்போது தேர்ச்சி பெற வைக்க கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

 கற்றல் அடைவு திறன் தேர்வுகளில் ஆண்டுதோறும் வளர்ச்சி இருப்பதை போன்ற தோற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். குறையும் பட்சத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு டோஸ் விழும் என்பதால், அதற்கேற்ப ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தில்லுமுல்லு வேலைகளில் இறங்கிவிடுகின்றனர். பெயரளவுக்கு தேர்வு நடத்தி, விடைத்தாள்களை, ஆசிரியர்களே நிரப்புகின்றனர். அல்லது மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவுகின்றனர். இதனால் கற்றல் அடைவு தேர்வில், மாணவர்கள் முழு திறனுடன் வெளிவருவதாக போலித்தோற்றத்தை உருவாக்கிவிடுகின்றனர்.

 இவற்றை கண்காணிக்கும் வகையில் மாநில அளவில் நடக்க உள்ள மாணவர்களுக்கான அடைவுத் திறன் தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக மொத்தம் 19 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மாநில திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார். 

சிறப்பு அதிகாரிகளின் விவரம்

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி சுந்தரராமன் (ஆலோசகர்), ஈரோடு - முகமது அஸ்லம் (ஒருங்கிணைப்பாளர்), வேலூர் - காயத்திரி (ஒருங்கிணைப்பாளர்), புதுக்கோட்டை - அருண்(ஒருங்கிணைப்பாளர்), விருதுநகர் - அப்துல்வாகாப் (ஒருங்கிணைப்பாளர்), சேலம் - ரகுராமன்(ஒருங்கிணைப்பாளர்), சிவகங்கை, ராமநாதபுரம் -மரியம்ரத்தினசாமி(ஒருங்கிணைப்பாளர்), கரூர் - மகாலட்சுமி (ஒருங்கிணைப்பாளர்), திருச்சி உமா மகேஸ்வரி(ஒருங்கிணைப்பாளர்), திருவண்ணாமலை ரேகா(ஒருங்கிணைப்பாளர்), நாமக்கல் செல்வகுமாரி, விழுப்புரம் சோபியா, தஞ்சாவூர் -சவரிநாதன், கிருஷ்ணகிரி அமுதா, தருமபுரி எஸ்தர், கோயம்பத்தூர் கணபதி, கடலூர் ஜரீன், திண்டுக்கல் வெண்மதி. 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png