!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 6 ஜனவரி, 2016

பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு

விருதுநகர்:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கற்றல் கையேடு இணைய தளத்தில் 

வெளியிடப்பட்டுள்ளது.இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெறுவர்கள் தேர்ச்சி பெறவும், தேர்ச்சியின் விளம்பில் இருப்பவர் அதிக மதிப்பெண் பெறவும், அதிக மதிப்பெண் பெறுவர் முழு மதிப்பெண் பெறும் வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல், புவியியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு கற்றல் கையேடுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.இக்கையேடுகள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம்'சிடி'யாக வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களுக்கும் பயன் பெறும் வகையில் கல்வித்துறை சார்பில் www.chiefeducationalofficer.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் பயன் பெறும் வகையில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 'சிடி'யாக வழங்கிய கையேட்டை அனைத்து மாணவர்களும் புத்தகமாக மாற்றுவது என்பது காலதாமதமாகும். இதை தவிர்க்க இணைய தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த முகவரியில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். ஓரிரு நாளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் கையேடும் இணைய தளத்தில் வெளியிடப்படும்,” என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png