!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 6 ஜனவரி, 2016

மாநகர பேருந்து நடத்துனர்கள் அடாவடி:4 கி.மீ., நடந்தே சென்ற பள்ளி மாணவன்
ள்ளி சீருடையில் வந்தும், பஸ் பாஸ் இல்லாத மாணவனை, மாநகர பேருந்து நடத்துனர்கள் இறக்கி விட்டுள்ளனர்.தி.நகரைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறான். 


பின்பற்றுவதில்லை:




நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு மாநகர பேருந்தில் செல்வதற்காக, காந்தி மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான்.தி.நகர் மார்க்கமாகசெல்லும் மாநகர பேருந்தில் (தடம் எண்:47) ஏறிய மாணவனிடம், பஸ்சில் இலவசமாக பயணிப்பதற்காக வழங்கப்படும், பஸ் பாஸை காட்டுமாறு, நடத்துனர் கேட்டு உள்ளார். தான் எடுத்து வர மறந்து விட்டதாக கூறிய மாணவன், தன் பள்ளி அடையாள அட்டையை காண்பித்துள்ளான். மேலும், பள்ளி சீருடையும் அணிந்து இருந்த நிலையில், அந்த மாணவனை ஏற்றிச் செல்ல நடத்துனர் அனுமதிக்கவில்லை.

கீழே இறக்கி விடப்பட்ட மாணவன், சற்று நேரத்தில் மற்றொரு மாநகர பேருந்தில் (தடம் எண்: 47) ஏறி பயணித்து உள்ளான். பயணத்தின் இடையே பாஸ் இல்லாத காரணத்திற்காக, சின்னமலை அருகே மீண்டும் மாணவனை, நடத்துனர் இறக்கி விட்டுள்ளார். அடுத்தடுத்து இரண்டு பேருந்துகளில் இருந்து இறக்கி விடப்பட்ட மாணவன், சின்னமலையில் இருந்து தி.நகரில் உள்ள தன் வீட்டிற்கு நடந்தே சென்று உள்ளான்.

பாஸ் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தாலும், பஸ் பாஸ் முழுமையாக அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படாத சூழலில், பள்ளி சீருடையுடன் வந்தாலே மாணவன் இலவசமாக பயணிக்க நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறி உள்ளனர். சில நடத்துனர்கள் அதை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது.


அறிவுறுத்துவோம்:




மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, சீருடையுடன் வந்தாலே பயணிக்க அனுமதிக்குமாறு, நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இந்த சம்பவத்தை அடுத்து, மீண்டும் நடத்துனர்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்துவோம்,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png