!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 12 ஜனவரி, 2016

திருவாரூர் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் யோகா படிப்புகள்; பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் பேட்டி

திருவாரூர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 40 மத்திய பல்கலைக்கழகங்களில் யோகா படிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது என்று பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

யோகா பாடம் 

தமிழ்நாட்டில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்தியா முழுவதும் 40 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. யோகா கலைக்கு முக்கியத்துவம் அளித்து 40 மத்திய பல்கலைக்கழகங்களிலும் யோகா மற்றும் யோகா சம்பந்தப்பட்ட படிப்புகள் வருகிற ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.400 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. 

யோகா பாடம் சொல்லிக்கொடுக்க 300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்காக தேசிய அளவில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மாநில பல்கலைக்கழகம் யோகா தொடங்க முன்வந்தால் அந்த பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் நிதி தரப்படும். என்ஜினீயரிங் படித்துவிட்டு நிறையமாணவர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள். காரணம் அவர்களில் பலருக்கு திறமை இல்லை.

எனவே திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் 2 இணையதளம் தொடங்கப்பட இருக்கிறது. 

50 ஆயிரம் இடங்கள்

வருங்காலத்தில் ஆன்லைனில் கல்வி மிகவும் பிரபலமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் காலியாக கிடக்கின்றன. சில என்ஜினீயரிங் கல்லூரிகளின் உரிமையாளர்கள், அந்த கல்லூரிகளை கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற அனுமதிக்கும்படி விண்ணப்பித்து உள்ளனர்.

இவ்வாறு பேராசிரியர் தேவராஜ் தெரிவித்தார். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png