!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 8 ஜனவரி, 2016

அரசு பள்ளி கட்டுமான பணிகள் மீண்டும் துவக்கம்! சித்தேரிப்பட்டு பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி
சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 4 ஆண்டுகளாக கிடப் பில் இருந்த கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


ரிஷிவந்தியம் அடுத்த சித்தேரிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள பழையசிறுவங்கூர், சிங்காரப்பேட்டை, சித்தால், மேலப்பழங்கூர், நூரோலை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவகள் பயின்று வருகின்றனர்.
இங்கு படித்த மாணவர்கள், தொடர்ந்து மேற்படிப்புக்காக 12 கி.மீ., தொலைவில் உள்ள தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, விரியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. பள்ளி கால நேரத்திற்கேற்ப போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மாணவர்கள் சிலர், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை உருவானது.

தொடர்ந்து பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த உயர்நிலைப்பள்ளி கடந்த 2009ம் ஆண்டு, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலரும் பள்ளியில் சேர்ந்தனர்.

தற்போது இங்கு 900க்கும் மேற்பட்டோர் பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும், போதிய வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள் ஏற்படுத்தப் படவில்லை.
இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து 2010 - 2011 ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் 24 வகுப்பறைகள், 2 ஆய்வகங்களுடன் கட்டுமான பணிகள் துவங்கியது.

வகுப்பறை கட்டடங்கள் அரைகுறையாக கட்டி முடிக் கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் வகுப்பறையின்றி மாணவர்கள் வெளிப்பகுதியில் மர நிழலில் அமர்ந்து படித்தனர். ஆய்வக வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியானது.

கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக கட்டுமான பணிகள் துவங்கப்படாததால், பெற்றோர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். இந்நிலையில் வகுப்பறை கட்டுமான பணிகள் தற்போது மீண்டும் துவக்கப் பட்டுள்ளது. நபார்டு திட்டத்தின் கீழ் 1.60 கோடி ரூபாய் மதிப்பில் வகுப்பறை மற்றும் சுற்றுசுவர் கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச் சியடைந்துள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png