!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 4 ஜனவரி, 2016

திருவாடானை பள்ளி தலைமைஆசிரியர்கள் அச்சம்! பாதுகாப்பு இல்லாததால் தொடரும் திருட்டு

திருவாடானை பகுதிகளில் அரசு பள்ளிகளில் பாதுகாப்பு இல்லாததால் மர்ம நபர்கள் கம்ப்யூட்டர்களை திருடி வருகின்றனர். இதனால் தலைமை ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவாடானை, தொண்டி, மங்கலக்குடி, பாண்டுகுடி, எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 7 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 800 முதல் 1,500 மாணவர்கள் வரை படிக்கின்றனர். இந்த பள்ளி களில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாக உள்ளது.


இரவுநேர காவலர்களும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மர்மநபர்கள் பள்ளி வளாகத்திற்குள் சென்று மது அருந்துவது, திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாண்டுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் டிச., 30 இரவு வகுப்பறை கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் 7 கம்யூட்டர்கள், நகர் எடுக்கும் இயந்திரம், புரஜக்டர் , மைக் உட்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். ஏற்கனவே ஆனந்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் திருடு போனது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை திருடி வருவதால் மற்ற பள்ளி தலைமை ஆசிரியர் களும் அச்சம் அடைந்துள்ளனர்.

தலைமைஆசிரியர்கள் கூறிய தாவது: பாண்டுகுடி அரசு பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் 30 லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் லேப் டாப்கள் தப்பின. சில மாதங்களுக்கு முன் ஆனந்தூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் கம்யூட் டர்கள் திருடுபோனது. திருடு போகும் கம்ப்யூட்டர்களுக்கு நாங்களே பொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது. சுற்றுச்சுவர் கட்டவும், இரவு காவலாளிகளை நியமிக்கவும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png