!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 13 ஜனவரி, 2016

ஒரேயொரு மாணவிக்காக இயங்கும் ரயில் நிலையம்

ஜப்பானில், ஒரே ஒரு மாணவிக்காக, ரயில் நிலையம் செயல்படும் தகவல் வெளியாகியுள்ளது.ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹக்காய்டோ தீவுப்பகுதியில், ரயில் நிலையம் ஒன்று போதிய பயணிகள் இல்லாமல் மூடப்பட இருந்தது. ஆனால், அந்த ரயில் நிலையத்தில் இருந்து ஒரே ஒரு மாணவி மட்டும் ரயிலில் ஏறி பள்ளி சென்று வந்தார். இதனையடுத்து, அந்த மாணவியின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, ரயில் நிலையத்தை மூடும் முடிவை, ஜப்பான் ரயில்வே நிர்வாகம் கைவிட்டது.மூன்றாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த முடிவால், மாணவி, பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரிக்கும் சென்று விட்டார். அவர், தற்போது கல்லுாரி படிப்பை முடிக்கவுள்ள நிலையில், அடுத்த, நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்த ரயில் நிலையத்தை மூடுவது தொடர்பாக, முடிவெடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் பாராட்டு
ஒரே ஒரு மாணவியின் கல்விக்காக, ரயிலை இயக்கி வரும் ஜப்பான் அரசுக்கு, சமூக வலை தளங்கள் வாயிலாக, மக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். * ஒரு பயணிக்காக ரயிலை இயக்கும்போது கூடுதல் செலவு ஏற்பட்டு நஷ்டம் ஆனாலும், குடி மக்களின் கல்வியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை
* இது, சிறந்த நடவடிக்கை; ஜப்பானின் குடிமக்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png