!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 12 ஜனவரி, 2016

நீங்கள் எந்த வகை மாணவர்? கண்டுபிடிக்க இதோ பரிசோதனை


நீங்கள் நன்றாக படிக்கிறீர்களா? அல்லது படிப்பு மண்டையில் ஏற மாட்டேங்குது என்று புலம்புகிறீர்களா?  உங்கள் திறனை நீங்களே பரிசோதித்துக் கொள்ள எளிய பரிசோதனை இருக்கிறது. 

'நம்ம புள்ளை எப்படிப் படிக்கிறானோ?' என்று ஏங்கும் பெற்றோரும் பிள்ளைகளின் நடவடிக்கைக்கு ஏற்ப பதிலளித்து இந்த பரிசோதனையை முயற்சிக்கலாம். வாருங் கள் சோதனையை தொடங்கலாம்...

1.    நான் பள்ளி செல்வதில் அக்கறையாக இருக்கிறேன்...
    ஆமாம்/ சில வேளைகளில் / விருப்பமின்றி செல்கிறேன்

2.    தினமும் பள்ளி அனுபவம் சிறப்பாக இருக்கிறது...
    ஆமாம்/ சில வேளைகளில்/ இல்லை

3.    எனது வீட்டுப் பாட பயிற்சிகளை நானே செய்கிறேன்...
    ஆம்/ சில வேளைகளில்/ செய்வதில்லை

4.    எதைப் படிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்
    ஆம்/ கொஞ்சம் புரியும்/ தெரியாது

5.    எனது மதிப்பெண்கள் திருப்திகரமாக உள்ளது...
    ஆம்/ சில வேளைகளில்/ இல்லை

6.    எனது ஆசிரியர்களால் நல்ல முன்னேற்றம் காண் கிறேன்...
    ஆம்/ பரவாயில்லை/ முன்னேற்றம் தெரியவில்லை

7.    நான் பாட வேளையில் நன்றாக குறிப்பு எடுப்பேன்...
    ஆம்/ சில வேளைகளில்/ இல்லை

8.    மாதிரி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுகிறேன்...
    ஆம்/ சில வேளைகளில்/ இல்லை

9.    வகுப்பறையில் ஆசிரியர் கேள்வி கேட்டால் பதிலளிப்பேன்
    ஆம்/ சில வேளைகளில்/ இல்லை

10.    எனக்கு படிக்க அவசியமான சில பொருட்கள் கிடைப்பதில்லை?
    இல்லை, தேவையான அளவு கிடைக்கிறது / சமாளிக்கலாம்/ ஆம் கிடைப்பதில்லை

இப்போது உங்கள் (பிள்ளைகள்) திறனை பரிசோதிக்கலாம். ஒவ்வொரு கேள்வியிலும் முதல்பதில்களுக்கு 10 மதிப்பெண்களும், இரண்டாம் பதில்களுக்கு 5 மதிப்பெண்களும், மூன்றாம் பதில்களுக்கு 3 மதிப்பெண்களும் கொடுங்கள். இப்போது உங்கள் மொத்த மதிப்பெண்களை கணக்கிடுங்கள்...

உங்கள் மதிப்பெண்கள் 75-க்கு மேல் 100 வரை இருந்தால்...

நீங்கள் முன்னணி மாணவர்களில் ஒருவர். கூர்ந்த அறிவுத்திறன் கொண்டவர் நீங்கள். படிப்பில் அக்கறை கொண்டவர். பள்ளிச்சூழலும், வீட்டுச்சூழலும் படிப்பதற்கு உகந்ததாக உள்ளது. எல்லா பாடங்களிலும் அக்கறை செலுத்தினால் சாதனை மாணவராக உருவெடுப்பீர்கள்.

உங்கள் மதிப்பெண்கள் 35-க்கு மேல் 75-க்குள் இருந்தால்...

நீங்கள் சராசரி மாணவர். படிப்பில் இன்னும் கொஞ்சம் அக்கறை செலுத்தினால் உங்களாலும் உச்சம் தொட முடியும். எந்தெந்த பாடங்களில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதுகிறீர்களோ, அதற்காக டியூசன் செல்வது, பயிற்சியாளரை நியமிப்பது, ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவது என அக்கறை காட்டும்போது நீங்களும் நிறைய மதிப்பெண்கள் பெற்றுவிடுவீர்கள்.

உங்கள் மதிப்பெண்கள் 35-க்கு குறைந்தால்...

படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய மாணவர் நீங்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து படித்தால் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிடலாம். கூச்சமின்றி சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுவதுடன், கூடுதல் நேரம் படிப்பதற்காக செலவிட்டால் எதிர்காலம் பளிச்சிடும்.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png