!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 6 ஜனவரி, 2016

பல நாள் இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணையை, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்டார்.

 பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 4ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. பிளஸ் 2 தேர்வு, வழக்கம் போல், மார்ச் முதல் வாரத்தில், 4ம் தேதி துவங்கி, ஏப்ரல், 1ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, வழக்கத்தை விட முன்கூட்டியே, மார்ச், 15ல் தேர்வு துவங்கி, ஏப்., 13ல் முடிகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும், பல நாள் இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணையை, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்டார்.


தமிழ் கட்டாயம்:
10ம் வகுப்புக்கு மட்டும், சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கு பதில், இந்த ஆண்டு, ஆறு பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு கூடுதலாக, தங்கள் மாநில மொழி அல்லது தாய் மொழியை, ஒரு தாள் மட்டும் எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூடுதல் மொழிப் பாடம் தேர்ச்சி கணக்கில் எடுக்கப்படாது; தமிழில் எடுக்கும் மதிப்பெண்ணே சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாளில் இப்படித் தான்!
* பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. முதல், 10 நிமிடங்கள், வினாத்தாளை வாசிக்கலாம். பின், 10:10 முதல், 10:15 மணி வரை, சுய விவர பதிவுக்கும், 10:15 மணி முதல், பகல், 1:15 மணி வரை தேர்வு எழுதவும் அவகாசம் வழங்கப்படுகிறது
* பத்தாம் வகுப்பு தேர்வு, காலை, 9:15 மணிக்கு துவங்குகிறது. 9:25 வரை வினாத்தாள் வாசிக்கும் நேரம். 9:25 முதல், 9:30 மணி வரை விடைத்தாளில் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 9:30 மணி முதல், 12:00 மணிக்குள் தேர்வு எழுத வேண்டும்.
அதிக இடைவெளி அவசியமா?
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நாட்களுக்கு இடையே அதிக நாட்கள் இடைவெளி உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் வீதம் குறைய வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
* பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டு தாள்களுக்கும், இடைவெளியின்றி, தொடர்ந்துதேர்வு நடத்தப்படுகிறது
* வழக்கமாக, கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகள், முன்னுரிமையுடன் நடத்தப்படும். இந்த முறை, இயற்பியல் தேர்வு இறுதி தேர்வாக, ஏப்., 1க்கு தள்ளப்பட்டுள்ளது.அதனால், கணினி அறிவியல் பிரிவு மாணவர்கள், மார்ச், 21ல், கணினி அறிவியல் எழுதி விட்டு, இயற்பியல் தேர்வுக்காக, 10 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
* 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் இரு தாள் தேர்வுகள், இடைவெளி இன்றி, தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பின், ஆங்கிலம் இரண்டு தாள்கள் மற்றும் கணித தேர்வுக்கு இடையில், தலா, 5 நாட்கள் இடைவெளி உள்ளது.இந்த இடைவெளி நாட்களை, அரசு பள்ளி மாணவர்கள் சரி வர பயன்படுத்துவரா என்பது சந்தேகம்.
தொழிற்கல்வி பாடங்களான வேளாண் செயல்முறை, இயந்திரவியல் போன்ற பாடங்கள், வேளாண், இந்திய மருத்துவ படிப்பு, பி.இ., போன்ற படிப்புகளில் சேர அவசியம். ஆனால், அந்த பாடங்களை, தேர்வு அட்டவணையில் குறிப்பிடாமல் விடுவதால், தொழிற்கல்வி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் குழப்பம் அடைகின்றனர்.
- ஆசிரியர் சங்கத்தின
தமிழில் எழுத எதிர்ப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை கட்டாய தேர்வாக எழுத வேண்டும் என்ற, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தெலுங்கு மொழி மாணவர்கள், கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அரசு பள்ளியில், தெலுங்கில் படிக்கும் மாணவர்கள்,நேற்று, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


பிளஸ் 2 தேர்வில் இயற்பியலுக்கு கடைசி இடம்:
கடந்தாண்டு மார்ச் 5ல், பிளஸ் 2 தேர்வும், மார்ச் 19ல், பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கிய நிலையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 4ம், பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 15 என முன்கூட்டியே துவங்கவுள்ளன.சென்னை, கடலுார் உட்பட 6 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் பொதுத் தேர்வுகள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இத்தேர்வுகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிளஸ் 2 தேர்வில், முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல் தேர்வு எந்தாண்டும் இல்லாத வகையில் கடைசி தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை குழப்பியுள்ளது.இதேபோல், மார்ச் 22ல் நடக்கும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்விற்கு பின், ஆறு நாட்கள் விடுமுறைக்கு பின் 29ம் தேதி தான் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. ஏப்.,13ல் தான் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. முன்கூட்டியே அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில தேர்வை தவிர ஒவ்வொரு தேர்வுக்கும் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வரை விடுமுறை இடைவெளி உள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: பொதுத் தேர்வுகள் அட்டவணை முடிவு செய்வதற்கு முன் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் கல்வித்துறை சார்பில் கருத்து கேட்கப்படும். ஆனால் இந்தாண்டு அதுபோன்று நடக்கவில்லை. மேலும் வெள்ளப் பாதிப்பால் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டாலும், அதிக விடுமுறை அறிவிப்பு, பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முதல்முறையாக கடைசியாக பட்டியலிடப்பட்டது போன்றவை குழப்பமாக உள்ளது. மேலும் கடைசி திருப்புதல் தேர்வு நடத்த முடியுமா என கேள்வியும் எழுந்துள்ளது என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png