!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 4 ஜனவரி, 2016

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுக்கு தயாராகும் வகையில் வெள்ளத்தால் பாதித்த மாணவர்களுக்கு சிறப்பு ‘கற்றல் கையேடு’ 3-ம் பருவ பாடப்புத்தகங்களும் வினியோகம்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுக்கு தயாராகும் வகையில் வெள்ள பாதிப்பு மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கப்பட்டது. இதேபோன்று 3-ம் பருவ பாடப்புத்தகங்களும் வினியோகிக்கப்பட்டது.

விலையில்லா பொருட்கள்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்பட 14 வகையான விலையில்லா பொருட்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்கள் முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2-வது பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3-வது பருவ புத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு பாடநூல் சேவை கழகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வினியோகம்

அங்கிருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை பள்ளியால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எடுத்துச் சென்றனர். அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர்தான் 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் மழை காரணமாக அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அதே சமயத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. இதையொட்டி சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டன. அந்த புத்தகங்களை கொண்டு முதல் நாளான நேற்றே ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர். மாணவ-மாணவிகளும் புது பாடத்திட்டங்களை ஆர்வத்துடன் படித்தனர்.

சிறப்பு கற்றல் கையேடு

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் பெரும்பாலான மாணவ- மாணவிகள் நோட்டு புத்தகங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை இழந்தனர். இதனால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளிடம் தேர்வு தொடர்பான அச்சம் உள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் எளிமையான வினா-விடை அடங்கிய சிறப்பு ‘கற்றல் கையேடு’ எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளிகளில் நேற்று வழங்கப்பட்டன.

இதில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு அனைத்து பாடங்களை உள்ளடக்கிய வினா-விடை ஒரே புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட பாடவாரியாக வினா-விடை புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த கற்றல் கையேடு பொதுத்தேர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png