!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 13 ஜனவரி, 2016

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த படிப்புகளில், தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.கரூர் பசுபதிபாளையம் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு: நோயின் தன்மையை கண்டுபிடிக்கும் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உபகரணங்களை கையாள, தகுந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அவசியம். இதற்காக மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவம் சார்ந்த எக்ஸ்ரே, ரேடியாலஜி மற்றும் இமேஜிங் தொழில்நுட்ப படிப்புகளை நடத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) சில விதிகளை கொண்டு வந்தது. பாடங்களை கற்பிக்கும் உதவி பேராசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.யு.ஜி.சி., விதிகள்படி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை பி.எஸ்.சி.,ரேடியாலஜி மற்றும் இமேஜிங் தொழில்நுட்ப துறையில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவில்லை. 

இதை கற்பிக்க ஒரு பேராசிரியர், 4 இணை பேராசிரியர்கள், 16 'டியூட்டர்'கள், 4 உதவி பேராசிரியர்கள் அவசியம். இதில் 9 பாடங்களை முழு நேர படிப்பாக கற்பிக்கின்றனர். 3 பாடங்கள் தவிர, 6 பாடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் இல்லை. போதிய ஆசிரியர்கள் இன்றி, ஒரு பேட்ஜ் மாணவர்கள் 3 ஆண்டு படிப்பை முடித்துள்ளனர்.
அரசின் பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த படிப்புகள் துவக்கப்பட்டது. ஆனால், தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதுவரை, மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, முத்துக்குமார் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அமர்வு சுகாதாரத்துறை செயலர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மனுதாரர் வழக்கறிஞர் ஹெரால்டு சிங் ஆஜரானார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png