!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 13 ஜனவரி, 2016

பாதுகாப்பில் கேள்விக்குறி ! : அரசு பள்ளிகளில் இல்லை சுற்றுச் சுவர்கள் : இடியும் நிலையில் வகுப்பறை கட்டடங்கள்
 அரசு பள்ளிகளில் சுற்றுச் சுவர் மற்றும் இரவு நேர காவலாளி இல்லாமல் பாதுகாப்பின்றி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள நிலையில் இடிந்த கட்டடங்களால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகளில் 50 சதவீதம் மேற்பட்ட பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. இதில் ஒரு சில ஊர்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே ஊருக்கு மத்தியில் உள்ளது. மீதமுள்ள பள்ளிகள் அனைத்தும் ஊருக்கு வெளியே தனியாக உள்ளது. இப்படி அமைந்துள்ள பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லாமல் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.


கால்நடைகள்
அதிலும் பெரும்பாலான பள்ளிகளில் காவலாளி இருப்பதில்லை. சுற்றுச் சுவர் இல்லாத பள்ளிகளில் வேலை நேரத்திலேயே பன்றி, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாதாரணமாக நடமாடுகின்றன. சில பள்ளிகளில் பெயருக்கு முள் வேலி அமைத்துள்ளனர். பள்ளியைச் சுற்றிலும் பாதுகாப்பு என நினைத்து இதை அமைப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தன்னுடைய இருப்பிடமாகப் பயன்படுத்துகின்றன. பள்ளிகளில் இரவு காவலாளி இல்லாததால் சில பள்ளிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகின்றன.
திருட்டுக்கு வாய்ப்பு
இதுதவிர பள்ளி பாதுகாப்பின்றி உள்ளதால் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டும் போகின்றன. கடந்த காலங்களில் நரிக்குடி அருகே வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளி, கணையமறித்தான் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் சுற்றும் சுவரும், காவலாளி இல்லாததால் கம்ப்யூட்டர், புரொஜக்டர், "டிவி', லேப்டாப் உள்ளிட்டவைகள் திருடு போயின. இதேபோல் பாதுகாப்பின்றி உள்ள அனைத்து பள்ளிகளிலும் இச்சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
கல்வி இயக்க அலுவலகம்
நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி ஊருக்கு வெளியே எந்த வித பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலகம் செயல்படுகிறது .இங்குள்ள விலை உயர்ந்த பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. உலக்குடி அரசுமேல் நிலைப்பள்ளி காட்டுப் பகுதியில் உள்ளது. இங்கும் சுற்றுச் சுவர் இல்லாததால் எந்த வித பாதுகாப்பும் இல்லை. இது தவிர, பல பள்ளிகளின் வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. தொடர் மழையால் பழைய
கட்டடங்கள் இடியும் நிலையில் உள்ளன.
மர்ம நபர்கள்
வீரசோழன் செய்யது கூறுகையில், ""திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதி பள்ளிகள் அருகில் கருவேலமரங்கள் நிறைந்து முட்புதர்கள் உள்ளன. சுற்றுச் சுவர் இல்லாததால் பாம்பு போன்றவைகள் பள்ளிக்குள் வந்து செல்கின்றன. சுற்றுச் சுவர் இல்லாத பள்ளிகளில் காவலாளிகளை நியமிக்கலாம். இரவில் வரும் மர்ம நபர்கள் மது குடிப்பதுடன் பிளாஸ்டிக் கப், பாட்டில் உள்ளிட்டவைகளை பள்ளியிலே போட்டு செல்கின்றனர். பாட்டில் உடைந்து மாணவர்கள் கால்களை பதம் பார்க்கிறது,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png