!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிச்சுமையால் அதிகாரிகள் புலம்பல்

நாடு முழுவதும், மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், அரசுத்துறை ஊழியர்கள் பீதியில் உள்ளனர். 

இந்தியாவில், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2011ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. மக்கள் முதல் வீட்டில் உள்ள வாகனங்கள் வரை, கணக்கெடுப்பில் இடம் பெற்றன.மத்திய அரசு உத்தரவுஇதற்காக, சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி கீழ் நிலை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என பலரும் ஈடுபடுத்தப்பட்டனர். அவற்றை, கம்ப்யூட்டரில் பதிவு செய்து, மத்திய அரசின் புள்ளியியல் துறைக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

கணக்கெடுப்பு சரியான முறையில் நடக்கவில்லை, அதிகப்படியான குளறுபடி நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், வரும், 18ம் தேதி முதல், பிப்., 18ம் தேதி வரை, மீண்டும் கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே, தேர்தல் பணியை கவனித்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு கவனிக்க முடியும் என, அதிகாரிகள் புலம்பினர். மாநில அரசின் திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கையில், மத்திய அரசின் கணக்கெடுப்பு தங்களை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கும் என அதிகாரிகள் புலம்பினர்.அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளதாகவும், தவறு உள்ள பகுதிகளை கண்டறிந்து ஆய்வு செய்யுமாறும், டி.ஆர்.ஓ., தலைமையிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முக்கியமாக, ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அது இல்லாதபட்சத்தில், ரேஷன் கார்டு எண் வாங்க வேண்டும் என்றனர்.ஒட்டுமொத்த நெருக்கடிக்கு...வாக்காளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் பணி என, சென்று கொண்டிருக்கையில், கூடுதலாக இந்த பணியும் சேர்ந்துள்ளதால் என்ன செய்வதென தெரியவில்லை. அதுவும், வரும், 18ல் துவங்கி பிப்ரவரி 18க்குள் முடித்து கொடுக்குமாறு கூறியுள்ளனர். ஏற்கனவே ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அவர்களை மீண்டும் அழைக்க வேண்டும். ஒட்டுமொத்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png