!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 19 ஜனவரி, 2016

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு


தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை (ஜன. 20) கூடுகிறது. ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. 

 ஆளுநர் உரைக்குப் பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில், கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

 14-ஆவது பேரவையின் கடைசிக் கூட்டம்: 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், 14-ஆவது சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. 
 இதன் 11-ஆவது கூட்டத் தொடர் ஜனவரி 20-இல் தொடங்குகிறது.
 ஆளுநர் கே.ரோசய்யா உரை நிகழ்த்தியதற்குப் பிறகு, அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அலுவல் ஆய்வு குழு கூட்டத்துக்குப் பிறகே தெரிய வரும்.

 பிப்ரவரியில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்? தீர்மானத்தின் மீதான விவாதங்களின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர். இதன்பிறகு அரசின் சார்பில் பதில் அளிக்கப்படுகிறது. 
 வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளதால், இடைக்கால நிதிநிலை அறிக்கையை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும். 2014-ஆம் ஆண்டு மார்ச் 25-இல் தமிழக அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதால், அதனை நடப்பு கூட்டத் தொடரிலேயே அரசின் சார்பில் பேரவையில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான கூட்டத் தொடர் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறலாம்.
 பரபரப்பான அரசியல் சூழலில்..: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பேரவை கூடுவதால், அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 குறிப்பாக, மழை-வெள்ள பாதிப்பு, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, நிவாரண உதவிகள் உள்ளிட்ட விஷயங்களை தேமுதிக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் எழுப்ப வாய்ப்பு உள்ளது.
 தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் பங்கேற்க இயலாது: இந்தக் கூட்டத் தொடரில் தேமுதிகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேரை பேரவைத் தலைவர் பி.தனபால் இடைநீக்கம் செய்துள்ளார். இதனால், அவர்கள் பேரவையின் கடந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்கவில்லை. அவர்கள் புதன்கிழமை தொடங்கவுள்ள இந்தக் கூட்டத் தொடரிலும் கலந்து கொள்ள முடியாது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png