!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 6 ஜனவரி, 2016

குழப்பம் ! : பாடமா.. பருவ தேர்வா... : மவுனத்தில் கல்வித்துறை
மூன்றாம் பருவ தேர்வு புத்தகங்கள் வழங்கி விட்ட நிலையில், இரண்டாம் பருவ தேர்வு நெருங்கி வருவதால், எதை மாணவர்களுக்கு போதிப்பது என்பது குறித்த வரையறை இல்லாமல் ஆசிரியர்கள், மாண வர்கள் குழபத்தில் உள்ளனர்.

அரையாண்டு எனப்படும் இரண்டாம் பருவ தேர்வு, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை டிசம்பர் மாதம் 10ம் தேதிக்கு மேல் தொடங்கி, 23-ம் தேதி முடி வடைந்து விடும். இந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தேர்வு தள்ளி போயின. வரும் 11-ம் தேதி தொடங்கி 27 வரை பத்து மற்றும் பிளஸ் 2, ஒன்று முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் தேர்வுகளை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி திறந்த முதல்நாளிலிருந்து தற்போது வரை, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத்திற்கான புத்த கங்கள் வழங்கப்பட்டு விட்டது. இந்த பாடங்களை ஆசிரியர்கள் நடத்தலாமா? அல்லது இரண்டாம் பருவத்திற்கு மாணவரை தயார் செய்ய வேண்டுமா? என்பது குறித்த எவ்வித அறிவுரையும், உத்தரவும் பள்ளி கல்வித்துறை பிறப்பிக்க வில்லை.
இதனால், ஆசிரியர்கள் எந்த பாடத்தை மாணவருக்கு நடத்துவது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். மாணவர்கள் புத்தகம் கையில் கிடைத்ததை தொடர்ந்து மூன்றாம் பருவ பாடங்களில் கவனம் செலுத்த ஆரம்பித் துள்ளனர். இரண்டாம் பருவ தேர்வை முழுமையாக எதிர் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர் ஒருவர் கூறும்போது: ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி என்று, டிசம்பர் மாதம் முழுவதும் ஆசிரியர்கள் சென்று விட்டோம். இதனால், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த முடியவில்லை. தற்போதும், இரண்டாம் பருவ தேர்வா? மூன்றாம் பருவ பாடங்களா என்ற குழப்பத்தில் உள்ளோம். கல்வித்துறை இது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வரை மட்டும் தான் மாநில முழுவதும் ஒரே வினாத் தாள். ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை அந்தந்த முதன்மை கல்வி அலுவலரே குழு அமைத்து தயாரித்து கொள்ள வேண்டும். வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்வுகளை முடித்திருக்கலாம். தற்போது அனைத்து மாவட்ட மாணவர்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தேர்வு நாட்களில் பொங்கல் விடுமுறை வருவதால் மாணவர்கள் பாடங்களை படிப்பதில் செலுத்தும் கவனம் சிதறும், என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png