!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 20 ஜூன், 2016

'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'
''பத்தாம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக, சான்றிதழ் வழங்கப்படும்,'' என, திறன் மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடிதெரிவித்தார்.


துாத்துக்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலங்களில் ஐ.டி.ஐ., தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் என்.சி.வி.டி., கட்டுப்பாட்டின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும், 18 லட்சம் மாணவர்கள், இப்படி படித்து வருகின்றனர்.
இவர்கள், 8ம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ.,யில் இரண்டு ஆண்டுகள் படித்தால், தங்களது உயர் படிப்பை தொடர விரும்பும்போது, 10ம் வகுப்பு முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப்பட்டு, நேரடியாக, பிளஸ் 1ல் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

அதேபோல், 10ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள், ஐ.டி.ஐ.,யில் படித்து விட்டு, உயர் படிப்பு படிக்க நினைக்கும்போது, அவர்கள், பிளஸ் 2 முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப்
படுவர்.அவர்கள் நேரடியாக, இன்ஜினியரிங், பட்டப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை வரும் ஜூலை, 15ல், பிரதமர் மோடி அறிவிக்கிறார். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களைஊக்குவிக்கும் விதமாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png