!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

யூதர்களை அழித்த ஹிட்லர் ஒரு யூதர் ?
ஆச்சரியமூட்டும் மரபணு சோதனை முடிவுகள்
லண்டன் : இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக சொல்லப்படும் நாஜி கட்சியின் தலைவரும் ஜெர்மனியின் அப்போதைய அதிபருமான ஹிட்லரின் முன்னோர்கள் யூத மற்றும் ஆப்பிரிக்க வம்சத்தை சார்ந்தவர்கள் என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை சமீபத்திய மரபணு சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.
ஜீன் - பால் முல்டர்ஸ் எனும் பத்திரிகையாளர் நியூயார்க்கில் தற்போது வசித்து வரும் ஹிட்லரின் தம்பி மகன் அலெக்ஸாண்டர் ஸ்டூவர்ட் மற்றும் ஆஸ்திரியாவில் வசிக்கும் ஹிட்லரின் மாமா மகன் நார்பர்ட் என்பவரிடமிருந்தும் பெற்ற சாம்பிள்களை வைத்து டி.என்.ஏ எனப்படும் மரபணு சோதனையை நடத்தியதில் இம்முடிவுகள் கிடைத்துள்ளன.
அச்சோதனையில் ஜெர்மனியில் அரிதாக இருக்கும் ஒரு வகை ஒய் க்ரோமஸோம் மூலம் இம்முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வகை குரோமஸோம்கள் யூத மற்றும் லிபியா, மொராக்கோ போன்ற வட ஆப்பிரிக்க மக்களிடத்தில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்த ரோன்னி டெக்கார்ட் எனும் மரபியல் விஞ்ஞானி யூத இனம் ஒரு யூதரின் மூலம் அழிக்கப்பட்டுள்ளது வரலாற்று ஆச்சரியம் என்றும் நிச்சயமாக உலகில் ஆரிய இனமே உயர்ந்தது என்றும் தன்னை அப்படிப்பட்ட பரிசுத்தவானாக நினைத்த ஹிட்லர் இம்முடிவை கேட்டிருந்தால் நிச்சயம் துக்கப்பட்டிருப்பார் என்றார்


இனஉணர்வு நமக்கும் வரட்டும்.
தென் ஆப்ரிக்காவில் உள்ள க்ருகேர் தேசிய விலங்கியல் பூங்காவில் (Kruger National Park) பலவிதமான காட்டுஉயிரினங்கள் இயற்கையான சூழ்நிலையில் வாழ்ந்துவருகிறது. சரி இனி நான் சொல்லவந்ததை சொல்கிறேன்.
ஒருநாள் ஒரு பெரிய காட்டுஎருமை கூட்டத்தில் இருந்து தனது குட்டியுடன் தாய் மற்றும் தந்தை காட்டுஎருமை மேய்வதற்காக ஒரு ஆற்றின் ஓரமாக செல்கிறது. அப்பொழுது அவற்றிக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான் குட்டிஎருமை சிங்கங்களுக்கு இரையாகும் என்று.
சற்று தொலைவில் இரையை எதிர்நோக்கி ஒரு காட்டுராஜா கூட்டம். அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த குட்டி எருமையை குறி வைத்தாகிவிட்டது. மெதுவாக குட்டியை நோக்கி நகர தாய் மற்றும் தந்தை எருமை தனது குட்டியை கேடயம் போல் பாதுகாத்து அழைத்துக்கொண்டு ஓடுகிறது.
என்னதான் ஓடினாலும் சிங்ககளின் சூட்சிவலையில் இருந்து தப்பமுடியாமல் பக்கத்தில் இருந்த ஆற்றினுள் தவறிவிழ சிங்கங்கள் சூழ்ந்துகொண்ட்டு அதை இரையாக்க அதன் கழுத்தை கவ்வி கொண்டு மேல்வர முயற்சி செய்கிறது, ஆற்றினுள் இருந்து ஒரு முதலையும் தன் பங்கிற்கு அந்த குட்டி எருமையை பிடித்து இழுக்க சிங்கங்கள் வெற்றிபெற்று கரையில் கொண்டுவந்து அதனை கடித்து குதறிக் கொண்டு இருக்கிறது.
அப்போதுதான் ஒரு அதிசயம் நிகழ்கிறது. குட்டியை பிரிந்த தாயும் தந்தை எருமையும் தனது கூட்டத்தை அழைத்துவந்து அந்த சிங்ககங்களை படுத்திய பாட்டினை இந்த காணொளியில் காணவும்.


[B]தமிழா இதுதான் தருணம்..... 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும். நம் ஈழத்து தமிழ் சொந்தங்கள் வாழ ஒன்றிணைவோம்.[/B]

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png