தெரியுமா? எந்திரனில் பாடப்பட்ட கிளிமஞ்சாரோவைப் பற்றி?
இப்போது சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் இந்த வருடத்தின் ஹிட்டான பாடல் என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்டது. இதில் வரும் கிளிமஞ்சாரோ என்பது என்ன தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் இது ஒரு அழகான மலை என்பது. தெரியாதவர்களுக்கு இந்த மலையை பற்றி சில தகவல்கள்.
தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை கிளிமஞ்சாரோ. இதுவே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலைகளிலேயே மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். நம் இமயமலையின் மிக உயந்த சிகரம் எவரெஸ்ட் அது போல கிளிமஞ்சாரோவின் மிக உயர்ந்த சிகரம் உகுரு. இது பெரிய மலை வகையை சார்ந்தது அல்ல. ஆனால் பெரும்பாலான பெரிய மலைகள் மலைத்தொடர்கள், ஆனால் கிளிமஞ்சாரோ தனிமலை வகைகளில் மிக உயர்ந்தது என அறியப்படுகிறது. இம்மலைக்குக் கிளிமஞ்சாரோ என்னும் பெயர் எப்படி வந்தது என்ற விஷயம் தெளிவாகத் தெரியவில்லை ஆனால், சுவாகிலி எனும் மொழியில் கிளிமா (Kilima) என்றால் குன்று (சிறுமலை) என்று பொருள் என்றும் ஞ்சாரோ (Njaro) என்றால் பழைய சுவாகிலி மொழியில்வெள்ளை,பளபளப்பான என்று பொருள் என்றும் கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் இது சுவாகிலி மொழிச்சொல் அல்ல என்றும், கிச்சகா மொழியில் ஜாரோ(jaro) என்றால் பயணம் செல்லும் தொடர் (caravan) என்றும் பல்வேறு விதமாகக் கூறுகின்றனர்.
ஐஸ்வர்யாவை எதற்காக கிளிமஞ்சாரோ மலையோடு கவிஞர் ஒப்பிட்டரோ தெரியவில்லை, இது எரிமலை ஆயிற்றே… என்ன உவமையோ…யார் கண்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.