|
|
ஆரம்ப கல்வியில் தமிழகம் அவலநிலையில் உள்ளதா? - 03-02-2011 |
தமிழக கிராமப்புறங்களில் படிக்கும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோருக்கு படிக்கும் திறனும், கணித அறிவும் மிக மோசமாக உள்ளன. |
என்.ஜி.ஓ. அமைப்பான ப்ரதம் வெளியிட்ட கல்வி அறிக்கையின் வருடாந்திர நிலை-2010(ஏ.எஸ்.இ.ஆர்) என்ற வெளியீட்டின் மூலம் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் 830 கிராமங்களில், 26,௦௦௦௦௦௦000 சிறுவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 47.5% மாணவர்களுக்கு ஒரு சிறிய பத்தியைக் கூட படிக்க முடியவில்லை. 5ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 30.6% பேருக்கு மட்டுமே 2ம் வகுப்பு நிலையிலுள்ள பாடங்களை படிக்க முடிந்தது. 3ம் வகுப்பில் படிக்கும் 79.5% மாணவர்களுக்கு சிறியளவிலான கூட்டல்-கழித்தல் கணக்குகளைக் கூட செய்யத் தெரியவில்லை. 5ம் வகுப்பில் படிக்கும் 15% மாணவர்களுக்கு மட்டுமே சிறிய கணக்குகளை செய்ய தெரிந்திருந்தது. தமிழ்நாட்டில் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், கல்வியின் தரம் அதிகரிக்கவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
நாட்டின் பிற மாநில அரசுகள் இதுபோன்ற அதிர்ச்சிகரமான அறிக்கைகள் வரும்போது உடனடி நடவடிக்கையில் இறங்கும். ஆனால் தமிழக அரசு இதுபோன்ற ஆய்வு அறிக்கைகளை ஆரம்பத்திலேயே நிராகரித்து விடுகிறது. இந்த மனோபாவம்தான் தமிழக பள்ளி கல்வியின் இந்த அவலநிலைக்கு காரணம் என்று கல்வி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தமிழ்நாடு சர்வசிக்ஸா அபியான் என்ற கல்வி சார்ந்த அமைப்பின் கவுரவ ஆலோசகராக இருக்கும் எம்.பி. விஜயகுமார், இந்த அறிக்கை குறித்து மாறுபட்ட தகவல்களை தெரிவிக்கிறார். ப்ரதம் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒருதலைப்பட்சமானதாக இருக்க வாய்ப்புள்ளது என்றும், பள்ளி குழந்தைகளின் படிக்கும் திறன், கணிதத் திறன் மற்றும் மொழித் திறனில் ஒட்டுமொத்த தேசிய சராசரியைவிட, தமிழகம் அதிக சராசரி பெற்றுள்ளதாக மத்திய மனிதவளத் துறை மற்றும் என்.சி.இ.ஆர்.டி. ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். |
|
|
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.