திருச்சி, பிப்.26-
தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு திருச்சி மண்டலம் சார்பில் மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம், அமைக்க வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களை போல சம்பளம் வழங்க வேண்டும் 2003-04-ல் தொகுப்பூதிய நிலையில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி-மதுரை ரோட்டில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு மறியல் செய்வதற்கு ஆசிரியர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து மறியலுக்கு முயன்ற போது காந்தி மார்க்கெட் போலீசார் இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, மற்றும் போலீசார் 50 ஆசியர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சந்தன மகாலில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.