பிளஸ் 2 "டாப்' ரேங்கில் தடுக்கி விழுந்த நகரங்கள்
இருபதாண்டுகளுக்கு முன் வரை, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாநில அளவில், "டாப்' ரேங்க் எடுத்த மாணவர்களில் பெரும்பாலானோர், பெரிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சமீப காலமாக, எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது, பெரிய நகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை நிரூபிப்பதற்கு, கடந்த மூன்று ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், "டாப்' ரேங்க் பெற்ற, மாணவர்கள் படித்த ஊர்களைப் பார்த்தாலே தெரியும்.
ஆண்டு வாரியாக சாதனை மாணவர்கள்:
2011 - டாப் 3 இடங்கள்
1. ரேகா - ஓசூர்
2. வேல்முருகன் - கள்ளக்குறிச்சி
3. வித்யா சகுந்தலா - திருநெல்வேலி
3. ரகுநாத் - பெரியகுளம்
3. சிந்துகவி-நாமக்கல்
3. ரேகா-ஓசூர்
2010 - டாப் 3 இடங்கள்
1. பாண்டியன் - தூத்துக்குடி
2. சந்தியா - நாமக்கல்
2. காருண்யா - ஊத்தங்கரை
2. தினேஷ் - ஊத்தங்கரை
3. பிரதக்ஷனா - விருதுநகர்
3. அபிநயா - ஈரோடு
3. மனோசித்ரா - நாமக்கல்
3. ஆன்டோ நஜாரனே - அரியலூர்
3. ஸ்ரீவித்யா - சென்னை
2009 - டாப் 3 இடங்கள்
1. பிரவீன் -கரூர்
1. ரமேஷ் - தென்காசி
1. சிஞ்சு - ஊத்தங்கரை
1. லிங்கேஸ்வரன் -ஈரோடு
2. சுகவனேஷ் - தர்மபுரி
2. ஐஸ்வர்யா - ஓசூர்
3. மீரா ராசிபா - நாமக்கல்
3. வைத்தீஸ்வரன் - நாமக்கல்
3. ஜாசிமா சுலைழா - திருநெல்வேலி
3. யாழினி-தூத்துக்குடி
2008 - டாப் 3 இடங்கள்
1. தாரணி - நாமக்கல்
1. ராஜேஷ் குமார் - செங்கல்பட்டு
2. ரம்யா - ஈரோடு
2. விக்ரம் - நாமக்கல்
3. தீபா - நாமக்கல்
ஆக, இந்த பட்டியலில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களைத் தேட வேண்டி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், மாணவர்கள் படிக்கும் முறை தான்.கிராமப்புறங்கள், சிறு நகரங்களில் படிக்கும் மாணவர்கள், அவரவர் ஆசிரியர் சொல்லித் தருவதை மட்டுமே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர். ஒரே பாதையில் சென்று பொதுத் தேர்வை அணுகுகின்றனர். பெரிய நகரங்களில், கோளாறே இங்கு தான் ஆரம்பிக்கிறது.
பள்ளியில் ஆசிரியர் ஒரு பாணியில் சொல்லித் தருவார்; வெளியே தனியாக "டியூஷன்' படிக்கும் போது, அந்த ஆசிரியர் ஒரு பாணியில் சொல்லித் தருவார்; வீட்டில் "படித்த' பெற்றோர் ஒரு பாணியில் படிக்கச் சொல்வர்; இப்படியே ஏகப்பட்ட பாணிகளை தலையில் ஏற்றிக் கொள்ளும் பிள்ளைகள், முடிவில் தங்கள் பாணியில் பொதுத்தேர்வை எழுதி விடுகின்றனர். இதுவே மதிப்பெண், சரிவதற்கு காரணமாகிறது.
இது போக, மொபைல் போன், "டிவி', சினிமா போன்றவை, மாணவர்களின் மனதை, வேறு வழிக்கு திருப்பி விடுகின்றன. நகர மாணவர்களுக்கு ஏற்படும் இன்னொரு முக்கிய பிரச்னை, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வது. இதனால், பிள்ளைகள் படிப்பு மீது முழு கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இக்காரணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பெரிய நகரங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.