மாணவர்களிடம் ஒழுக்கக்குறைவு அதிகரிப்பால் தேர்ச்சி வீதம் குறைவு : முதன்மை கல்வி அலுவலர் வேதனை
திருவாடானை : ""மாணவர்களிடத்தில் ஒழுக்கக்குறைவு அதிகமாக இருப்பதால் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது,'' என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
திருவாடானையில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற பின் இவர் கூறியதாவது: தமிழகத்தில் வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபட்டால் ராமநாதபுர மாவட்டத்திற்கு மாற்றப்படுகிறார்கள். அவர்களை பணியில் ஈடுபட வைப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் போது பெற்றோர், மாணவனுக்கு ஆதரவாக பேசுகிறார்களே தவிர, அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதில்லை.
தொண்டி போன்ற பல பள்ளிகளில் மாணவர்களிடம் ஒழுக்கக் குறைவு ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் சோதனை நடந்த போது காதல் கடிதம், நடிகைகளின் படங்கள், மொபைல்போனில் காதல் படங்கள் என வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் செயலில் மாணவர்கள் ஈடுபடுவது தெரியவந்தது. சில பள்ளிகளில் ஆசிரியர்களின் செயல்கள் கண்டிக்கத்தக்கதாக உள்ளது.
திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தம்பிதுரை, குடித்துவிட்டு பள்ளியில் படுத்திருப்பது குறித்து பெற்றோர் சங்கத்திலிருந்து புகார் வந்தது. உடனடியாக நீண்ட விடுப்பில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்று பல காரணங்களால் சில அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
வரும் காலத்தில் 80 சதவீதம் வரை தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும், என்றார்.
வரும் காலத்தில் 80 சதவீதம் வரை தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும், என்றார்.
அச்சகங்களில் பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்க இடம் இல்லை : பள்ளிகளுக்கு கொண்டு செல்ல தடை
விருதுநகர் : தமிழகத்தில் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. ஜூலை 26 ல் விசாரணை நடக்க உள்ள நிலையில், பழையபாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. சமச்சீர் பாடப்புத்தகங்கள் 95 சதவீதம், பழைய பாட புத்தகங்கள் 85 சதவீதம் அச்சிடப்பட்டுள்ளன. இதன் பணிகள் நிறைவு பெறும் நிலையில், அரசு கிடங்கில் புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது தவிர அந்தந்த கல்வி மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியில் ஸ்டாக் பாய்ன்டும் உள்ளன. அச்சகங்களில் இடப்பற்றாக்குறையால் அரசு கிடங்கு, ஸ்டாக் பாய்ன்ட் பள்ளிகளில் இறக்கப்பட்டு வந்தன. இதனிடையே, ஸ்டாக் பாய்ன்ட் பள்ளிகள், அரசு புத்தக கிடங்குக்கு , ஜூலை 26 வரை புத்தகங்களை அனுப்புவதை நிறுத்த தமிழ்நாடு பாட நூல் கழக நிறுவன அதிகாரிகள் அச்சகங்களுக்கு வாய் மொழி உத்தரவிட்டுள்ளனர். இதனால் புத்தகங்களை வைக்க இடமில்லாமல் அச்சகங்கள் திணறி வருகின்றன . பல அச்சகங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஸ்டாக் பாயின்ட் பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றன. பள்ளிகளிலோ புத்தகங்களை இறக்க தலைமையாசிரியர்கள் தயங்கி வருகின்றனர்..
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.