!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

TET : என்.சி.டி.இ., உத்தரவில் மாற்றம்: கல்வித்துறை செயலர் மீது வழக்கு

ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் உத்தரவை செயல்படுத்தவில்லை' என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
ராஜபாளையம் இன்பக்குமார் தாக்கல் செய்த மனு:

தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்.சி.டி.இ.,) அறிவிப்பின்படி 2010 ஆக.,23 க்கு பின் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் தகுதித்தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது. அதில் 2011 ஜூலை 29 ல் பள்ளிக்கல்வித்துறை சில மாற்றங்களை செய்தது. 'அந்த அறிவிப்பிற்கு பின் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரையறுக்கப்பட்ட 32 பாடங்களில் பட்டப்படிப்பு முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதித் தேர்வு எழுத முடியும்' என தெரிவிக்கப்பட்டது. எனவே, 'தேசிய ஆசிரியர் கல்விக்குழு பிறப்பித்த உத்தரவை மட்டுமே செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அதில் மாற்றம் செய்யக்கூடாது' என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். 'தகுதி அடிப்படையில் மனுவை பரிசீலித்து மூன்று மாதங்களுக்குள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் உத்தரவு பிறப்பிக்க ஜூலை 24 ல் ஐகோர்ட் உத்தரவிட்டது; ஆனால் நடவடிக்கை இல்லை. முதன்மைச் செயலர் சபீதா மீது கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஆர்.கிருஷ்ணசாமி, அரசு வக்கீல் குணசீலன் முத்தையா ஆஜராகினர். அரசுத்தரப்பில் ஜன.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png