!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 6 ஜனவரி, 2015

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை துறை அலுவலர்களாக நியமிக்க தேர்வுத்துறை நடவடிக்கை தேவை                  அரசுத் தேர்வுத்துறை தேர்வு மையங்களில் துறை அலுவலர்கள் நியமிப்பதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதில் வஞ்சனை செய்து வருகிறது. இனி வரும் காலங்களில் துறை அலுவலர்களாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.                 துறை அலுவலர்கள் நியமனம்: அரசுத்தேர்வுத்துறை சார்பில் பொதுத்தேர்வு மையங்களில் துறை அலுவலர்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்களை மட்டுமே நியமித்து வருகிறது. ஒரு தேர்வு மையத்தில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினால் கூடுதல் துறை அலுவலராக மற்றொருவரை நியமனம் செய்யும். கூடுதல் துறை அலுவலர், என அழைக்ப்படுவார்கள். கூடுதல் துறை அலுவலர்களாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை தேர்வுத்துறை நியமிக்கிறது. துறை அலுவலர்களாக இது வரை நியமிக்கப்படவில்லை. மூத்த ஆசிரியர்கள் தவிப்பு: துறை அலுவலர்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது. கூடுதலாக நியமிக்கப்படும் துறை அலுவலர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நியமிக்கப்படுகின்றனர். இதில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணி மூப்பில் உள்ள ஆசிரியராக இருக்கும் போது, அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்காலம் குறைந்த நிலையில் துறை அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பணி மூப்புள்ள ஆசிரியர்கள், பணிக்காலம் குறைந்த ஆசிரியர்களான துறை அலுவலர்களுக்கு கீழ், கூடுதல் துறை அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். தர்ம சங்கடமான நிலையில் பணி மூப்புள்ள ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.  நடவடிக்கை தேவை: தேர்வு மையத்தில் துறை அலுவலர்களாக, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களையும் நியமிக்க தேர்வுத்துறை முன் வர வேண்டும். கூடுதல் துறை அலுவலர்களாக மட்டும் நியமிப்பதை கைவிட வேண்டும், என அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்குமா? 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png