!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 6 ஜனவரி, 2015

முறைகேட்டை தடுக்க டி.ஆர்.பி., முடிவு: தேர்வர் முன் விடைத்தாள் கட்டுக்கு 'சீல்' நாமக்கல்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், முறைகேட்டை தடுக்க, விடைத்தாள் கட்டுகள் அடங்கிய உறையில், தேர்வர் முன், 'சீல்' வைக்கவும், இரு தேர்வர்களின் கையெழுத்தை பெறவும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்பாடு செய்துள்ளது. டி.ஆர்.பி., அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 10ம் தேதி, மாநிலம் முழுவதும், போட்டித் தேர்வை நடத்துகிறது. சில லட்சம் பேர், இந்த தேர்வை எழுத உள்ளனர். தேர்வு நடைமுறைகளில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவ்வப்போது சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்து வருகிறது. அதன்படி இந்த தேர்வில், தேர்வு அறையில், மொத்தமாக சேகரிக்கப்படும் விடைத்தாள்களை, ஒரு உறையில் போட்டு, தேர்வர் முன்னிலையில் அதை, 'சீல்' வைக்கவும், இது தொடர்பாக, இரு தேர்வர்களிடம் கையெழுத்து பெறும் நடைமுறையையும் அமல்படுத்துகிறது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png