!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 8 ஜனவரி, 2015

திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டுரை போட்டி: திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டுரை போட்டி: ஸ்மிருதி இரானி--புதுடெல்லி: திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு குறித்த கட்டுரை போட்டிகள் நாடுமுழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளதாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இப்போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு மற்றும் திருக்குறளை சேர்ப்பது குறித்து புதிதாக வெளியிடப்படும் கல்வி கொள்கையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜய் எழுதிய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு குறித்த வரைவு புத்தகத்தை ஸ்மிருதி இரானி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்காக ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் தேர்தெடுக்கப்பட்ட 51 திருக்குறள்கள் இடம்பெற்றுள்ளன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png