!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 9 பிப்ரவரி, 2015

மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறியா?ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை சென்னை:'மாணவ, மாணவியருக்கு, டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன், பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:* பள்ளிக் குழந்தைகள் சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன்படி, அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; உணவு உண்பதற்கு முன், கைகளை கழுவ வேண்டும். * வகுப்பறைகளை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். வகுப்பறை, கழிவறையை சுற்றி தண்ணீர் தேங்கினால், உடனடியாக தலைமை ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் தெரிவிக்க வேண்டும். விழிப்புணர்வு * கொசு பெருக்கத்தை தடுக்க, குடிநீர் பானைகள், தண்ணீர் தொட்டிகளை மூட வேண்டும். * டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை, மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்த வேண்டும். * மாணவ, மாணவியருக்கு, கடுமையான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், ஆரம்ப சுகாதார மையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்; பெற்றோருக்கும் அறிவுறுத்த வேண்டும்; சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். * வரும் 10ம் தேதி, குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், குடற்புழு நீக்க மருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்; விடுபட்ட குழந்தைகளுக்கு, 13ம் தேதி சிறப்பு முகாம் நடக்கும். * இதை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png