!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 31 மார்ச், 2015

10ம் வகுப்பு தேர்வு துவங்கியது: நகலெடுப்பு கடைகளை மூட உத்தரவு
பெங்களூரு: மாநிலம் முழுவதும், 3,038 தேர்வு மையங்களில் நேற்று, 10ம் தேர்வு நடந்தது. மொத்தம், 3,038 தேர்வு மையங்களில், 8.57 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்; 829 தேர்வு மையங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 

நேற்று துவங்கிய தேர்வு, ஏப்., 13ம் தேதி வரை நடக்கிறது. 148 பதற்றமான தேர்வு மையங்கள் என்றும், 50 தேர்வு மையங்கள் மிகவும் பதற்றமானவை என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவைகளில், 70 தேர்வு மையங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வரும் 19ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும், 211 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வை நியாயமான முறையில் நடத்த முடிவு செய்துள்ள கல்வித் துறை, மாணவ, மாணவியரின் பெற்றோர், தேர்வு மையத்திற்கு வருவதற்கும், சுற்றுப்புற பகுதிகளில் நடமாடவும் தடை விதித்துள்ளது. தேர்வு நாட்களில், தேர்வு மையங்களிலிருந்து, 200 மீ., சுற்றளவுக்கு, 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அது மட்டுமின்றி, தேர்வு மையங்களை சுற்றியுள்ள அனைத்து நகலெடுப்பு கடைகளையும் மூட உத்தரவிட்டு உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png