!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 27 மார்ச், 2015

வாட்ஸ் அப்பில் பிளஸ் 2 வினாத்தாள் அவுட் : கிருஷ்ணகிரி சிஇஓ இடமாற்றம்? சென்னைக்கு திடீர் அழைப்பு 

கிருஷ்ணகிரி: ஓசூரில் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சிஇஓ) மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.  விசாரணைக்காக அவரை ஆவணங் களுடன் சென்னைக்கு அவசரமாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஓசூரில் உள்ள ஒரு  தனியார் பள்ளியில் கடந்த 18ம் தேதி நடந்த பிளஸ்-2 கணிதத் தேர்வின் போது, அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய, ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி  ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர், கேள்வித்தாளை வாட்ஸ் அப் மூலம் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு  அனுப்பினர். இதையடுத்து 4 ஆசிரியர்களையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டனர். 

இரண்டு நாள் காவல் முடிந்து, நேற்று ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டபோது, ஓசூர் கிளை சிறையில் அடைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை  விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார், 4 ஆசிரியர்களையும், ஓசூர் சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.  4 ஆசிரியர்களும் மாவட்ட  குற்றப்பிரிவு போலீசிடம் அளித்த வாக்குமூலம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதில், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின்  தூண்டுதலின் பேரில் தான், வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாளை அனுப்பினோம் என கூறியதாக தெரிகிறது. ஆசிரியர்கள் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களை  போலீசார் தேடி வருகின்றனர். கைதுக்கு பயந்து அவர்கள் தலைமறைவாக உள்ளனர். 

ஓசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் சார்பில் சந்தித்து, போலீசில் என்ன வாக்குமூலம் அளித்தீர்கள் என்பது குறித்த கேட்க  வரலாம் என போலீசார் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு யார் யார்? ஆசிரியர்களை சந்திக்க வருகின்றனர் என்பதை உளவுத்துறை போலீசாரும் தீவிரமாக கண்காணித்து  வருகின்றனர். இதனால் 4 ஆசிரியர்களுக்கும் சிறையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலை சென்னை பள்ளிக்கல்வித்துறை  உயரதிகாரிகள், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியை (சிஇஓ), வாட்ஸ் அப்விவகாரம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்து  கொண்டு உடனடியாக வரும்படி அழைத்துள்ளனர். அதன்படி அவர் சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  அத்துடன் அவர் பணியிடமாற்றம் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது. 

இதனிடையே இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அலுவலக ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற  31ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர்  பால்ராஜ் நேற்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png