!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 18 ஜூன், 2015

பள்ளி புத்தகத்தில் கருணாநிதி, 'மாஜி' அமைச்சர் பெயர்: பக்கங்களை நீக்க அதிகாரிகள் ஆலோசனை
தமிழக பாடநுால் கழகத்தின் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெயர்களை நீக்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 2011 முதல், சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம் அமலில் உள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் இன்னும் மாற்றப்படவில்லை. இந்நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொருளியல் பாடத்துக்கான, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகங்களின் முகவுரையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
நான்கு ஆண்டுகளாக, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கண்ணில் படாத இந்தப் பக்கங்கள், தற்போது அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:
கடந்த, 2004ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி, பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்கள், 2006ல் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்தப் புத்தகங்கள், பத்து ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. 
கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக இருந்த நாகநாதன், தலைமையிலான குழு, இந்த புத்தகங்களை உருவாக்கியது. அதனால், நாகநாதன் எழுதிய முகவுரையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி கூறிஉள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் பாடத்திட்டம் 
மாற்றப்படாததால், பழைய புத்தகமே அப்படியே அச்சடிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பெயர்கள் இடம் பெற்று உள்ளன. தற்போது, முகவுரை பக்கத்தை என்ன செய்வது என்று, ஆலோசனை நடந்து வருகிறது. அரசு முடிவுப்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கவும், கடைகளில் விற்பனை செய்யவும் உள்ள பிளஸ் 1 பாட புத்தகத்தில், முகவுரை பக்கங்களை நீக்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, பாடநுால் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png