!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 26 ஜூன், 2015

2005-க்கு முன்பு அச்சிடப்பட்ட 1000, 500 ரூபாய்களை மாற்றும் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றும் கால அவகாசத்தை கூடுதலாக 6 மாதம் நீட்டித்து, வரும் டிசம்பர் 31-ம் தேதிவரை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது. 2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றும் காலக்கெடு இம்மாதம் 30-ம் ேததியோடு முடிகிறது. அந்த அவகாசம் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில்,
மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. குறிப்பாக 500, 1,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் அதிகம் புழங்குகின்றன. இதைத் தடுக்க,  2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 1000, 500 ரூபாய்  நோட்டுகளை  பாதுகாப்பு கருதி இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்தது.

2005ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா அச்சிட்டு வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு தன்மை கொண்டவை. அதன்படி 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை  வங்கியில் கொடுத்து  மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 1ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. எனினும் இன்னும் அதிகமாக ரூபாய் நோட்டுகள் புழக்கம் இருந்ததையடுத்து மேலும் 6 மாதங்கள் நீட்டித்தது. இந்நிலையில் வரும் 30ம் தேதி ரூபாய் நோட்டுக்களை மாற்ற கடைசி நாளாகும். இந்த காலக்கெடு முடிய இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் மூன்றாவது முறையாக கால அவகாசதத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அடையாளம் காண்பது எளிது

2005ம் ஆண்டுக்கு முந்தைய 500, 1,000 ரூபாய்களில் பின்புறத்தின் கீழ் அச்சடித்த ஆண்டு இடம் பெற்றுஇருக்காது. அதே நேரம் 2005க்கும் ஆண்டுக்கு பின்பு அச்சிடப்பட்ட இந்த மதிப்பிலான ரூபாய்களின் பின்புறத்தின் கீழ் பகுதியில் அச்சிட்ட ஆண்டு 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png