!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 27 ஜூன், 2015

மருத்துவ கலந்தாய்வு; பழைய மாணவர்களுக்கு கோர்ட் 

அனுமதி!!


 கடந்த ஆண்டு பிளஸ்2 முடித்த மாணவர்கள் இந்தாண்டு மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கலாம், நடப்பாண்டு மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் வேணுகோபால் அடங்கிய டிவிசன் பெஞ்ச் வெளியிட்டுள்ள தீர்ப்பில்:
தமிழ்நாடு கல்வி நிறுவன சேர்க்கை சட்டம் 2006  கீழ் முந்தைய ஆண்டு மாணவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் போட்டியிடலாம்.அதுமட்டுமின்றி இந்திய மருத்துவ கவுன்சிலிங்கில் எவ்வித விதிமுறை தடைகளும் இல்லை கடந்த கல்வியாண்டு மாணவர்கள் இக்கல்வியாண்டின்  மருத்துவ கலந்தாய்வில் பங்குப்பெற, எனவே பழையமாணவர்களும் எம்.பி.பி.ஸ்/ பி.டி.ஸ் (2015-2016) மருத்துவ கவுன்சிலிங்கில் பங்குபெறலாம் என்று தீர்ப்பளித்தனர்.
மாணவர்கள் மனு விவரம்
கடந்தாண்டு பிளஸ் 2 முடித்தவர்கள் இந்தாண்டு மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60-க்கும் மேற்பட்ட நடப்பாண்டு மாணவர்கள் மனு செய்தனர். அந்த மனுவில் பழைய மாவணவர்கள் பங்கேற்றால்நடப்பாண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு பாதிக்கும் என கூறப்பட்டிருந்தது.  
தமிழ்நாட்டு மருத்துவ கல்வி இயக்குனரின் பதில் மனு
எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேருவதற்கான தகுதி விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளதாவது முந்தையஆண்டு மாணவர்கள் தற்போதைய மாணவர்களுடன் போட்டி போட சட்டத்தில் தடை இல்லை.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 2,257 இடங்களில் 1,709 இடங்கள் 2014 - 15ம் ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 548 இடங்கள் முந்தைய ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கலாம். இந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் என கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்திருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இக்கல்வியாண்டு மாணவர்களின் மனுவை  தள்ளுபடி செய்து, கடந்த ஆண்டு பிளஸ்2 முடித்த மாணவர்களும் நடப்பாண்டு மருத்துவ கவுன்சிலிங்கில் பங்குப்பெறலாம் என்று தீர்ப்பளித்தனர்.  

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png