!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 25 ஜூன், 2015

திருச்சியில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை நிலவேம்பு கசாயம் கொடுத்து கட்டாயப்படுத்த வேண்டாம்

திருச்சி: "அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டாம்' என, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
திருச்சியில், மாநகராட்சி பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் உடல் நலனுக்காக, மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் பெற்று, நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி துவங்கியது.
நேற்று முன்தினம், திருச்சி, பாலக்கரை ஹோலி ரெடிமர்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ரம்ஜான் நேன்புக்கான விரதத்தில் இருந்த மாணவியருக்கும், கசாயம் கொடுத்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக கூறி, மாணவியரின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் சொர்ணலதா, அங்கு பேச்சுவார்த்தை நடத்தி, பெற்றோர்களை சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, "மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து, கட்டாயப்படுத்தக் கூடாது' என, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png