!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 26 ஜூன், 2015

பலவீனம் வேண்டாம்; கல்வியில் கவனம் தேவை!


ந்திய வெளியுறவு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னையைச் சேர்ந்த, பார்வையற்ற பெண் பெனோ ஜெபின், விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, வாழ்த்து பெற உள்ளார்.

பெனோ ஜெபின் தற்போது டில்லியில் உள்ளார். மத்திய அமைச்சர்கள், சுஷ்மா சுவராஜ், பொன்.ராதாகிருஷ்ணன், ஜிதேந்திர சிங், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி, ஆகியோர், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரப், தன், 'டுவிட்டர்' தளத்தில், பெனோஜெபின் அமைச்சரை, நேற்று முன்தினம் சந்தித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
பெருமைப்படுகிறேன்:மேலும், 'பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர், முதன் முறையாக, வெளியுறவுத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்; நான் பெருமைப்படுகிறேன். அவர் சிறப்பாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்' என, தெரிவித்து உள்ளார்.


சுஷ்மா சுவராஜ், 'டுவிட்டர்' இணையதளத்தில், பெனோஜெபின் குறித்து கூறும்போது, 'கனவுகளுக்கு தடை எதுவும் இல்லை' என, குறிப்பிட்டுள்ளார். இன்று அகில உலகத்தையும், தன் பக்கம் ஈர்த்துள்ள, பெனோ ஜெபின், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவரை, அவரது நண்பர்கள் செல்லமாக, 'கலெக்டர்' என்றே அழைத்து வந்தனர். இன்று அது உண்மையாகி உள்ளது.

இவரது தந்தை அந்தோணி சார்லஸ். ரயில்வே ஊழியராக உள்ளார். தாய் பத்மஜா. இவர்கள் மகளின் வளர்ச்சிக்கு, பெரிதும் உதவியாக இருந்துள்ளனர்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை படைத்த, பெனோ ஜெபின், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தார். அதன்பின், ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரியில், 2011ல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தார். லயோலா கல்லுாரியில், 2013ல் எம்.ஏ., முடித்தார்.கல்லுாரி படிப்பை முடித்த பின், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்தபடி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரானார்.

பாடங்களை, 'பிரெய்லி' முறையில் படித்து, தேர்வு எழுதினார். முதல் முயற்சியில், தோல்வியை தழுவினார். இரண்டாவது முயற்சியில், தேசிய அளவில், 343வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார்.தற்போது, வெளியுறவுத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வங்கியில் பணிபுரிந்தபோது, சிறப்பாக பணியாற்றி உள்ளார். இதற்கு தன் கடின உழைப்பும், உடன் பணிபுரிந்தவர்களின் ஒத்துழைப்புமே காரணம் என, பெனோ ஜெபின் தெரிவித்து உள்ளார்.

பணிகள் ஏராளம்:மேலும், அவர் கூறியதாவது: 'ஜாவ்ஸ்' என்ற சாப்ட்வேர் உதவியுடன், கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை அறிந்து கொள்கிறேன்; சமூக வலைதளங்களில் வரும் விவரங்களையும் அறிந்து கொள்கிறேன். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை படிக்க, பெற்றோர் உதவி செய்கின்றனர்.மாற்றுத்திறனாளிகள், கல்வியை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

நம் கனவு நிறைவேறவும், நாம் அதிகாரத்தை பெறவும், கல்வி உதவும். நம் பலவீனங்களை மறந்து, கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.போட்டி தேர்வுக்கு தயாராகும் போது, நமக்கு ஏற்ற வழியில், 'பிரெய்லி' புத்தகங்கள், ஆடியோ போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும்.

என் கனவு நிறைவேற உதவியவர்களில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், பொன்.ராதாகிருஷ்ணன், மனிதநேய அறக்கட்டளையை சேர்ந்த கணேஷ், சங்கர், கிங் மேக்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் பூமிநாதன் ஆகியோருக்கு பங்குண்டு.

வெளியுறவு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது, மிகவும் முக்கியமானது. நான் இந்தி யாவின் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். அதற்காக நான் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

லிட்டில் பிளவர் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து:ஐ.எப்.எஸ்., என்ற இந்திய அயல்நாட்டு பணிக்கு தேர்வான, முதல் பார்வையற்ற பெண், தான் படித்த, சென்னை லிட்டில் பிளவர் பள்ளியில், ஆசிரியர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சார்லஸ் - மேரி பத்மஜா தம்பதியின் மகள் பினோ ஜெபின், 24; பார்வையிழந்த எம்.ஏ., பட்டதாரி. இவர், பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். கடந்த ஆண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, ஐ.எப்.எஸ்., பணிக்கு தேர்வானார்.

முழுவதும் பார்வைத்திறன் இழந்த பெண் ஒருவர், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறை. பினோ ஜெபின், சென்னை, அண்ணாசாலையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில், பிளஸ் 2; ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம்; லயோலா கல்லுாரியில், எம்.ஏ., ஆங்கிலம் படிப்பு முடித்தவர்.

பினோ ஜெபின், தான் படித்த லிட்டில் பிளவர் பள்ளிக்கு நேற்று நேரில் வந்து, ஆசிரியர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு, பள்ளியின் தாளாளர் அமலா ரபேல், தலைமை ஆசிரியர் மார்கரெட் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். பினோ ஜெபினின் பெற்றோருக்கும், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.லிட்டில் பிளவர் பள்ளி மாணவ, மாணவியரும், பினோ ஜெபினை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறி, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png