!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 22 ஜூன், 2015

சமச்சீர் கல்வியால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு; மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வியால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

பரிசுத் தொகைவழங்கும் விழா

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழக அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. 


அதன்படி இந்தாண்டு தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவையில் 2014-2015-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேலம் அம்மாபேட்டை கொங்கு வெள்ளாள கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. 

780 மாணவர்களுக்கு

இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 780 மாணவ-மாணவிகளுக்கு ரூ.94 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகையை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

தமிழை கட்டாயப்பாடமாக படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து, சமச்சீர் கல்வியை கொண்டு வந்ததும் தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனை ஆகும். தற்போது அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதிலும் தி.மு.க. சார்பில் மாணவர்கள் சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

2007-ல் நெல்லையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. அப்போது தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை என்பதை உருவாக்கி மாணவர்களுக்கு இதுவரை பல்வேறு நல உதவிகளை வழங்கி வருகிறோம். அதாவது 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இன்றைக்கு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி முறை தான். 

வேலையில்லாமல் அவதி

இதனால் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போடும் அளவிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள். 2011-ல் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டபோது சமச்சீர் கல்வியை ரத்து செய்து ரூ.200 கோடி மதிப்பிலான சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மாணவர்கள் திண்டாடினர். அவர்களின் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்தனர். 

அப்போது உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவு கிடைத்தது. 

தமிழகத்தில் படித்த இளைஞர்கள் பலர் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். சுமார் 85 லட்சம் மாணவர்கள் வேலையில்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

துணை நிற்க வேண்டும்

முறையான ஆட்சி இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது. ஆகவே இவற்றை எல்லாம் நினைத்து பார்த்து எதிர்காலத்தில் இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட, நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட, நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png