10.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்' வினியோகம்
கடந்த ஓராண்டு காலமாக தாமதமாகி வந்த, அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான, இலவச,'லேப் - டாப்' கம்ப்யூட்டர் வழங்கும் பணி, அடுத்த வாரம் முதல், துவங்க உள்ளது. அடுத்த, 6 மாதங்களுக்குள், 10.5 லட்சம், 'லேப் - டாப்'கள் வினியோகிக்கப்பட உள்ளன. இலவச 'லேப் - டாப்':அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச 'லேப் - டாப்' வழங்கப்பட்டு வந்தது. 2014 - 15ல் படித்த பிளஸ் 2 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்து விட்டனர்.
ஆனால், அவர்களுக்கு இன்னும், 'லேப் - டாப்' வழங்கப்படவில்லை. இதற்கு, தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' நிறுவனம், 'லேப் - டாப்' கொள்முதல் செய்வதில், இழுபறி நீடித்து வந்ததே காரணம். தற்போது, அப்பிரச்னை, சரி செய்யப்பட்டு விட்டது.
பேச்சு:இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை வட்டாரங்கள் கூறியதாவது:'லேப் - டாப்' கொள்முதலுக்காக, மூன்று நிறுவனங்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் விலையை, மேலும் குறைப்பதற்காக, பேச்சு நடத்தியதால் தாமதம் ஏற்பட்டது. தற்போது, விலையை குறைக்க, அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுவிட்டன.
சென்னை, திருச்சி மாவட்டங்களில், கடந்த ஆண்டு பயின்ற, 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஏற்கனவே, 'லேப் - டாப்' கொடுக்கப்பட்டு விட்டது. மீதி, 5 லட்சம் மாணவர்களுக்கு 'லேப் - டாப்' தர வேண்டும்; இந்த ஆண்டுக்கு, 5.5 லட்சம் மாணவர்களுக்கு தர வேண்டும்.எனவே, 10.5 லட்சம், 'லேப் - டாப்'கள், கொள்முதல் செய்ய, 'ஆர்டர்' தரப்பட்டு உள்ளது. இதில், 'லெனோவா' - 5.5 லட்சம்; 'எச்.பி.,' - 1.6 லட்சம்; 'ஏசர்' - 1.6 லட்சம் 'லேப் - டாப்'களை தர வேண்டும். முதல்
கட்டமாக, கடந்த ஆண்டு பயின்றவர்களுக்கு, 5 லட்சம்; இந்த கல்வியாண்டில் பயில்வோருக்கு, அடுத்த கட்டமாக, 5.5 லட்சம், 'லேப் -டாப்'கள் வினியோகிக்கப்பட உள்ளன.
தற்போது, 2 லட்சம், 'லெனோவா' நிறுவன, 'லேப் - டாப்'கள் வந்து விட்டன. அவற்றை சோதித்த பின், அடுத்த வாரத்தில், பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முதலில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு, அனுப்பப்படும். படிப்படியாக, ஐந்த மாதங்களுக்குள், 10.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தர சோதனை எப்படி? :கொள்முதல் செய்துள்ள, 'லேப் - டாப்'களை பரிசோதிக்க, தனி குழுவை, 'எல்காட்' அமைத்து உள்ளது. அவர்கள், 25 ஆயிரம், 'லேப் - டாப்'களில், உத்தேசமாக, 1 சத
வீதத்தை, அதாவது, 25 'லேப் - டாப்'களை பரிசோதிப்பார்கள். அதில், ஒன்று, கோளாறாக
இருந்தாலும், 25 ஆயிரம், 'லேப் -டாப்'களும், அந்த நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பப்படும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.