!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 3 ஜூலை, 2015

பீகாரில் 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா
பீகாரில், போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த, 1,400 ஆசிரியர்கள், மாநில அரசின் சட்ட நடவடிக்கைக்கு பயந்து, ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல ஆசிரியர்கள் ராஜினாமா செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

போலி சான்றிதழ்
பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியராக பணியாற்றும் பலர், போலியான கல்விச் சான்றிதழ் அளித்து, பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பாட்னா ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்
பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு: போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள், ஜூலை, 8க்குள் ராஜினாமா செய்ய வேண்டும்;
தவறினால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அவர்களுக்கு சம்பளமாகக் கொடுத்த தொகையும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தொடக்க கல்வி ஆசிரி யர்கள், 1,400 பேர், நேற்று ராஜினாமா
செய்தனர். கெடு முடிவடைய, இன்னும் ஐந்து நாட்கள் உள்ளதால், மேலும் பலர் ராஜினாமா செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித்துறை பீகாரில், தொடக்க கல்வித் துறையில், 3.5 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களில் கணிசமானோர், போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png