!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 31 ஜூலை, 2015

திட்டமிட்டபடி நாளை ஆசிரியர்கள் போராட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) அறிவித்துள்ளது.
 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
 குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையடுத்து, இந்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என ஆசிரியர்களிடையே சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநிலத் தொடர்பாளரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவருமான இளங்கோவன் கூறியது: 
 இந்த உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் போராட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க உள்ளார் என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png