!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 7 ஜூலை, 2015

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்
தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 'ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.இதனால் மாணவர்கள் கல்விக்கடன், உதவித்தொகை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மே 7ல் பிளஸ் 2, மே 21ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு அவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களுடன் கூடிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளின் மூலம் வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டது.அவர்கள் அதை பயன்படுத்தி கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்தனர். மருத்துவம், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிலும் அந்த மதிப்பெண் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்பட்டு சேர்க்கை நடந்தது. இந்நிலையில் 'ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ் எப்போது வரும் என மாணவர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“வழக்கமாக பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட மூன்றாவது வாரத்தில் 'ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இம்முறை அது வழங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அதை பெற்று கல்லுாரிகளில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. வங்கிகளில் கல்விக்கடன், இதர கல்வி உதவித்தொகை பெறவும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் சென்று மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கவும் குறிப்பிட்ட காலத்திற்குள் 'ஒரிஜினல்' சமர்ப்பிப்பது முக்கியம். தேர்வுத்துறை இயக்குனராக இருந்த தேவராஜன் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். அத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள வசுந்தராதேவி அச்சான்றிதழ் தருவதற்கான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்,”என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png