!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 2 ஜூலை, 2015

21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி.

பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக வெளியிடப்பட்ட இந்த 21 பல்கலைக் கழகங்களில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக் கழகங்களை பட்டியலிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-ன் படி மத்திய/மாநில/மாகாண சட்டம் அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன் படி பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டவையே முறையான பல்கலைக் கழகங்கள். 

எனவே விதிமுறைகளுக்கு ஏற்ப முறையான தகுதி இல்லாத கல்வி நிறுவனங்கல் தங்களை சட்டப்பிரிவு 23-ன் படி பல்கலைக் கழகம் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது. 

டெல்லியில், வரன்சேயா சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா கமர்ஷியல் யுனிவர்சிட்டி, யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, வோகேஷனல் யுனிவர்சிட்டி, ஏடிஆர் செண்ட்ரல் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி உள்ளிட்ட 6 போலி பல்கலைக் கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png