மருத்துவ படிப்புக்கு 22ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு
மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 22ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம் நடந்தது. மொத்தமுள்ள, 2,939 இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்தனர். ஆனாலும், 137 பேர், கல்லுாரிகளில் சேரவில்லை.
இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, வரும், 22 முதல்,
25ம் தேதி வரை நடத்த, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.மாணவர்கள் சேராததால், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, ஒன்பது இடங்கள், 20 பி.டி.எஸ்., இடங்கள்; சுய நிதி கல்லுாரிகளில், 108 எம்.பி.பி.எஸ்., இடங்கள் என, 137 இடங்கள் காலியாக உள்ளன. 'இந்த இடங்களுக்கும், சுய நிதி கல்லுாரிகளின், 1,020 பி.டி.எஸ்., இடங்களுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். இதுபற்றிய விவரங்கள், ஓரிரு நாளில், www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.