!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 31 ஜூலை, 2015

இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் நடந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், நாடு முழுவதும் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

ராமேஸ்வரத்தில் இருந்து, 5 கி.மீ.,யில் உள்ள பேக்கரும்பு வரை, எங்கு பார்த்தாலும் மனிதக் கூட்டமாக தென்பட்டது. இறுதி அடக்கம் நடந்த மைதானத்தைச் சுற்றி ஏராளமானோர் கூடினர்.
பலர், அருகில் இருந்த வீடு, கட்டட மாடிகள், தென்னை, பனை மரங்கள் மீது ஏறி நின்று, இறுதிச் சடங்கை பார்த்தனர். மைதானத்தின் பின் பகுதியில் கூடிய கூட்டத்தினர், திடீரென தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற முயன்றனர். அவர்களை, போலீசார் தடியை சுழற்றி விரட்டி அடித்தனர்.

வெளிநாட்டு செய்தியாளர்கள்: செய்தி சேகரிக்க, வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினரும் நுாற்றுக்கணக்கில் திரண்டனர். பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட, 'கேலரி'யில் இடம் பிடிப்பதில், பலத்த போட்டி நிலவியது. இந்த நெரிசலில், போட்டோகிராபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். பாதுகாப்புக்காக நின்ற கடற்படை வீரர் ஒருவர், வெயிலால் மயங்கி விழுந்தார். 

கடை அடைப்பு:கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் நேற்று, முழு கடையடைப்பு நடந்தது. இறுதி யாத்திரை நடந்த, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. கலாமின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கில், நாடு முழுவதிலும் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அலைந்த எம்.எல்.ஏ., : அஞ்சலி செலுத்த வந்த தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜனை, விஜயகாந்த் அமர்ந்திருந்த, 'கேலரி'க்கு பாதுகாப்பு படையினர் அனுப்பினர். மேடையில் அவரை கண்டதும், 'விருட்' என, பிரதமருக்கான, 'கேலரி'க்கு சென்றார்.அங்கிருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், 'இங்கே வராதீங்க' என சுட்டிக் காட்டியதையடுத்து, வேறுவழியின்றி விஜயகாந்த் அமர்ந்திருந்த 'கேலரி'க்கு சென்று, கடைசி இருக்கையில் அமர்ந்தார்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு!: ராமநாதபுரத்தில் இருந்து தலைவர்கள் புறப்பட்டுச் சென்ற பின், தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது; போக்-கு-வ-ரத்து இரண்டு மணிநேரம் ஸ்தம்பித்தது. போலீசார், இதை ஒழுங்குபடுத்தவில்லை.

அரசியலை மறந்ததலைவர்கள்!: அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அப்துல் கலாம் என்பதால், அவரது இறுதிச் சடங்கில், அரசியல்வாதி கள், அரசியலை மறந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தது, பார்வையாளர்கள் மத்தியில்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அனைத்து கட்சித் தலைவர்களையும் அவர்களது இடத்திற்கு சென்று நலம் விசாரித்தார்.த.மா.கா., தலைவர் வாசன், காங்., தலைவர் இளங்கோவன் ஆகியோரை, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்று, நலம் விசாரித்தார்.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேனும், ராகுலும், 15 நிமிடம் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவும், ராகுலும் கை குலுக்கினார்.

பா.ஜ.,வும்கலாமும்!:மறைந்த கலாம், பா.ஜ., தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு நண்பர். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான், ஜனாதிபதி ஆனார் கலாம். தற்போது, பா.ஜ., ஆட்சியில், கலாம் இறுதிச் சடங்கில், பா.ஜ., பிரதமரான மோடி பங்கேற்றார்.
வெறும் சம்பிரதாயமாக வந்து செல்லாமல், சோக உணர்வுடன் பிரதமர் அமர்ந்திருந்தது உருக்கமாக இருந்தது. ஒரு மணிநேரம், அனைத்து நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்தபடி அமர்ந்திருந்தார்.கலாம் உடலை சுற்றி வந்து தலை வணங்கி, கை கூப்பி வணங்கினார். அப்போது, வெளியில் குவிந்திருந்த தொண்டர்கள் கோஷமிட்ட போதும் மோடி, அவர்களை பார்த்து கை அசைக்கவில்லை.

கேரளாவின் ஒற்றுமை!:கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் உம்மன்சாண்டி, அவரது மகன் சாண்டி உம்மன், எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், அமைச்சர்கள் முனீர், பி.ஜே.ஜோசப் ஆகியோர், ஒரே தனி விமானத்தில் மதுரை வந்தனர். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம், ராமேஸ்வரம் சென்று, கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத மகன் சாண்டி உம்மன், கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பியதால், அவரையும் அழைத்து வந்தார் உம்மன் சாண்டி.

300 நிருபர்கள் குவிந்தனர்!:கலாமின் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில், பிரதமர், மத்திய அமைச்சர்கள் அமர ஓரிடம், வெளிமாநில பிரமுகர்கள் அமர மற்றொரு இடம் என, இரண்டு, 'கேலரி'கள் அமைக்கப்பட்டிருந்தன. உடல் அடக்கம் செய்யும் இடத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு, கேலரிகளில் உறவினர்,முப்படை அதிகாரிகள் இருந்தனர்.பத்திரிகையாளர்களுக்காக, சற்று துாரத்தில் அமைக்கப்பட்ட கேலரியில், 'வீடியோ ஸ்டாண்ட்' வைப்பதற்கு மட்டும் இடம் தரப்பட்டிருந்தது. 300க்கும் மேற்பட்ட நிருபர்கள், போட்டோகிராபர்கள், கலாம் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை, 'கவர்' செய்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png