!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 3 ஜூலை, 2015

மருத்துவம் படிக்க 69 பேர் கடிதம் பெறவில்லை
மருத்துவப் படிப்புக்கு இடம் தேர்வு செய்த, 69 பேர், சேர்க்கை கடிதம் பெறாமல் புறக்கணித்து உள்ளனர்.
தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில், 2,939 பேர், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்தனர். ஆனால், பழைய மாணவர் சேர்க்கை விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்ததால், உடனடியாக சேர்க்கை கடிதம் தரப்படவில்லை.

சிக்கல் தீர்ந்தபின் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது; கல்லுாரியில் சேர நேற்று கடைசி நாள்.
எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு கல்லுாரிகளில், 12 பேர்; சுயநிதி கல்லுாரிகளில், 46 பேர்; அரசு கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்பில், 11 பேர் என, 69 பேர், இடம் தேர்வு செய்தும், சேர்க்கை கடிதம்
பெறவில்லை.
மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் கூறுகையில்,''காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. இடம் தேர்வு செய்த, 69 பேர் சேர்க்கை கடிதம் பெறவில்லை; இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 69 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும்,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png