மாநில 'ரேங்க்' எடுத்த988 மாணவர்களுக்கு பரிசு
பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' எடுத்த, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 988 பேருக்கு, 1.68 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் மாநில அளவில், முதல் இடங்களைப் பிடித்த, 21 பேருக்கு, தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழும் கடந்த வாரம் வழங்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பரிசுத் தொகையை வழங்கி பாராட்டினார்.
மீதமுள்ளவர்களுக்கு, பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், 988 பேருக்கு, 1.68 கோடி ரூபாய் பிரித்து வழங்கப்பட்டது.
தமிழை முதல் மொழிப்பாடமாக எடுத்து, பிளஸ் 2வில் மாநில அளவில், இரண்டாம் இடம் பெற்ற, 26 பேர்; மூன்றாம் இடம் பெற்ற, 23 பேர்; 10ம் வகுப்பில் மாநில முதலிடம் பெற்ற, 51 பேர்; இரண்டாம் இடம் பெற்ற, 194 பேர்; மூன்றாம் இடம் பெற்ற, 694 பேர், இந்தப் பரிசுத் தொகையை பெற்றனர்.
அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, சுப்பிரமணியன், வீரமணி மற்றும் அப்துல் ரஹீம் இதில் பங்கேற்று, தங்கள் துறை சார்ந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். துறை சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.